ஐமா ‘ திரைப்பட விமர்சனம்
தமிழ் எக்ஸாடிக் பிலிம்ஸ் (Tamil Exotic Films )நிறுவனம் சார்பில் சண்முகம் ராமசாமி ,’ஐமா’ திரைப்படத்தைத் தயாரித்துள்ளார்.

தன் தாயின் உடல் நிலை பாதித்ததால் அவரை மருத்துவமனையில் சேர்க்கிறான் ஆதாம் (யூன்ஸ்) , விபத்தில் சிக்கிய மரியா (எல்வின் ஜூலியட் ) மருத்துவ சிகிச்சைக்காக அதே மருத்துவமனையில்சேர்க்கப்படுகிறாள் ஒரு கட்டத்தில் இவர்கள் இருவரையும் கடத்தி ரகசிய இடத்தில் அடைக்கின்றனர். கை கால் கட்டப்பட்டு கிடக்கும் அவர்கள் ஒரு வழியாக அதிலிருந்து மீண்டு அந்த இடத்திலிருந்து தப்பிக்க முயல்கின்றனர்.அவர்களை கடத்தியவனின் திட்டம் என்ன ? அவர்களை அவன் ஏன் கடத்தினான்? என்னும் கேள்விகளுக்கு விடை சொல்லுகிறது படத்தின் மீதி கதை…

படத்தின் கதையின் நாயகனாய் நடித்துள்ள யூனஸ் தான் ஏற்று கொண்ட கதாபாத்திரத்துக்கு ஏற்ற வகையில் நன்கு நடித்துள்ளார் கதாநாயகி எவ்லின் ஜூலியட்டும் குறைவின்றி நடித்து தன்னுடைய பாத்திரத்துக்கு நடிப்பால் வலு சேர்க்கிறார், அடுத்து வில்லனாக நடித்திருக்கும் தயாரிப்பாளர் சண்முகம் ராமசாமி குறிப்பிட்டு சொல்லும் வண்ணம் நன்கு நடிப்பை வெளிப்படித்தியுள்ளார்.

ஆரம்பத்தில் இது பேய் படமா என்று நினைக்க வைத்து விட்டு பின்னர்தான் மெதுவாக சைன்ஸ் பிக்ஷனாக மாறும் வகையில் படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
கே ஆர்.ராகுல் இசையில் பாடல்கள் தனி கவனம் பெரும் வகையில் உள்ளது பெறுகிறது.விஷ்ணு கண்ணனின் கேமரா கதைக்கு தேவையான நகர்வுகளை பதிவு செய்துள்ளது.சயின்ஸ் பிக்ஷன் பாணியில் கதையை சொல்ல முயன்றுள்ள ராகுல் ஆர்.கிருஷ்ணா திரைக்கதை அமைப்பில் மேலும் விறுவிறுப்பு சேர்த்திருந்தால் அது படத்துக்கு இன்னமும் வேகத்தை கூட்டியிருக்கும்.
ஐமா-டைம் பாஸ் சினிமா
