Monday, April 20

‘ஆர் யூ ஓகே பேபி’ பட விமர்சனம்

மணம் செய்து கொள்ளாமல் மனம் ஒன்றிணைந்து ( living together)வாழும் தம்பதியருக்குஒரு பெண் குழந்தை பிறக்கிறது , ஆனால் தங்களது வறுமைக்கு விலையாக, அந்த குழந்தையை கேரளாவில் வசிக்கும் வசதியான தம்பதியருக்கு தத்து கொடுக்கிறார்கள்.பல வருடங்களாக குழந்தை இல்லாமல் இருக்கும் அந்த தம்பதியர்,அந்த குழந்தை மீது ஏராளமாக பாசமும் நேசமும் கொள்கின்றனர்,ஆனால் குழந்தை மீதுள்ள பற்றுதலினால் தத்துக் கொடுத்த குழந்தையின் தாய் மறுபடியும் தன்னுடைய குழந்தை மீண்டும் தனக்கே வேண்டும் என்று தொலைக்காட்சி நிகழ்ச்சியான ‘சொல்லாததும் உண்மை’க்கு செல்கிறார். அதன் மூலமாக அந்த குழந்தை மீட்கப்பட்டு, மீண்டும் தாயிடம் சென்றதா ? குழந்தையை தத்தடுத்த தம்பதியினரின் நிலை அதன் பின் என்னவாயிற்று ? இது போன்ற கேள்விகளுக்கு என்ன பதிலை சொல்லுகிறது என்பதுதான் ‘ஆர் யூ ஓகே பேபி?’ படத்தின் கதை.

‘ஆர் யூ ஓகே பேபி?’ படத்தை லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் தயாரித்து இயக்கியுள்ளார் ,தொலைக்காட்சியில் அவருக்கு பெயர் வாங்கி தந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராகவே அவரும் படத்தில் வருகிறார்.படத்தின் பல்வேறு கதாபாத்திரங்களை ஏற்று நன்கு நடிப்பை வெளிப்படித்தியுள்ள சமுத்திரக்கனி ,அபிராமி, முல்லையரசி, மிஷ்கின், அனுபமா குமார் போன்றோரை மனம் திறந்து பாராட்டலாம்.

இசைஞானி இளையராஜாவின் இசையும் , கிருஷ்ண சேகரின் ஒளிப்பதிவும் கதையோடு பயணித்து காட்சிகளுக்கு வலு சேர்க்கிறது .

மொத்தத்தில் ‘ஆர் யூ ஓகே பேபி’ படம் சென்டிமென்ட் பட ரசிகர்களுக்கு டபுள் ஓகே என்று சொல்லலாம்.

Spread the love