Tuesday, October 13

2k காதல் மற்றும் அந்த கால பல பதிவுகளை சொல்லும் படம் “யுவர்ஸ் லவ்விங்லி” ( Yours Lovingly)

MR Motion Pictures தயாரிப்பில் உருவாகும் “யுவர்ஸ் லவ்விங்லி” ( Yours Lovingly) படத்தின் தலைப்புடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது .இந்த படம் தற்போது நிறைவடையும் நிலையில் உள்ளது.

2000-களின் தொடக்க காலப் பள்ளிப் பருவம், நட்பு, காதல் மற்றும் அந்தக் காலத்தின் இனிமையான நினைவுகளை மையமாகக் கொண்டு உருவாகும் இந்த படத்தில் ஆகாஷ் பிரேம்குமார், ஸ்ரீதேவி அப்பல்லா ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

குறிப்பாக செல்போன்கள் அன்றைய அளவுக்குப் பயன்பாட்டில் இல்லாத காலகட்டத்தில், வாக்மேன் மூலம் இசைச் கேட்பவர்களை வியந்து பார்க்கப்பட்டது. அது போஸ்டரில் இருப்பது அப்போது அதை பயன்படுத்தியவர்கள் பல ஞாபகம் வரும்.

காதலர்கள் தங்கள் காதலை நேரடி சந்திப்புகள் மற்றும் கடிதங்கள் மூலமாகவும் தங்களது உணர்வுகளைப் பகிர்ந்துகொண்ட விதத்தையும், அந்த வாழ்க்கையை இயல்பாகவும், உணர்வுப்பூர்வமாகவும் பதிவு செய்யும் வகையில் கதை அமைக்கப்பட்டுள்ளது.

அந்தக் காலகட்டத்தில் பள்ளிப் பருவத்தைக் கடந்தவர்களுக்கு தங்களுடைய இனிய நினைவுகளை மீண்டும் திரும்பிபார்க்கும் விதமாகவும், இன்றைய தலைமுறையினருக்கு அன்றைய வாழ்க்கை முறையை அறிமுகப்படுத்தும் விதமாகவும் இப்படம் அமையும்.

இப்படத்தை இயக்கி இருக்கிறார் முத்துராம் முருகன்.

இவர் ‘சூது கவ்வும்’ படத்தின் இயக்குநர் நலன் குமாரசாமியிடம் இணை இயக்குநராகப் பணியாற்றியவர். இப்படத்தின் கதை மற்றும் திரைக்கதையை மகேஷ் செல்வராஜ் எழுதியுள்ளதுடன், தயாரிப்பாளராகவும் பொறுப்பேற்றுள்ளார். சூரஜ் நல்லுசாமி ஒளிப்பதிவு செய்ய, ஏ.எல். ரமேஷ் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொள்கிறார். சகிஷ்னா சேவியர் இசையமைக்கிறார். இன்பா பிரகாஷ் கலை இயக்கத்தையும், டேஞ்சர் மணி சண்டைக்காட்சிகளையும், கலைக்குமார் நடன இயக்கத்தையும் கவனிக்கின்றனர.

தற்போது நெய்வேலி பகுதியில் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், படத்தின் தலைப்பை அறிவிக்கும் வகையில் வெளியாகியுள்ள இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 2K காலகட்டத்தின் காதல், நட்பு மற்றும் மறக்க முடியாத நினைவுகளைத் திரையில் கொண்டுவரும் “யுவர்ஸ் லவ்விங்லி” ( Yours Lovingly) திரைப்படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

#Yourslovingly

Spread the love