உலகளவில் Prime Video-இல் பிப்ரவரி-10 அன்று மகான் வெளியிடப்படுகிறது
செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ பட நிறுவனம் சார்பில் லலித் குமார் தயாரித்து, கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள ‘மகான்’ திரைப்படத்தில் சீயான் விக்ரம் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதில் துருவ் விக்ரம், பாபி சிம்ஹா மற்றும் சிம்ரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
பிப்ரவரி-10 முதல் Prime உறுப்பினர்கள் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் இப்படத்தைக் காணலாம்.
லலித் குமார் தயாரித்துள்ள இத்திரைப்படம் ஒரு சாதாரண மனிதனின் முழுமையான வாழ்க்கையையும், அவர் தன்னைச் சுற்றியுள்ள மக்களையும் மாற்றியமைக்கும் தொடர் நிகழ்வுகளின் கதைத் தொகுப்பாகும். மகான் படத்தில் பாபி சிம்ஹா மற்றும் சிம்ரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர், நிஜ வாழ்க்கையில் தந்தை-மகனான சீயான் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் ஆகியோர் முதல் முறையாக இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இப்படம் பிப்ரவரி 10 முத...









