மஞ்சள் சினிமாஸ் சார்பில் கோல்டன் சுரேஷ் மற்றும் S.விஜயலட்சுமி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வேம்பு’.
அறிமுக இயக்குநர் ஜஸ்டின் பிரபு இயக்கியுள்ள இந்த படத்தில் மெட்ராஸ் (ஜானி) ஹரிகிருஷ்ணன் கதாநாயகனாக நடிக்க, ஷீலா கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
கிருஷ்ணகிரி மாவட்ட பகுதியில் இருக்கக்கூடிய ஒரு சின்ன கிராமத்துல செங்கல் சூளையில வேலை செய்றவரோட பொண்ணு தான் வேம்பு ,சிலம்புக் கலையில மிகுந்த ஆர்வமும், திறமையும் உள்ள வேம்பு மாவட்ட அளவில் சிலம்பு போட்டிகளில முதல் இடத்திலேயே இருக்காங்க, கல்லூரியில் படிச்சிட்டு இருக்கிற வேம்புவோட அத்தை மகன் தான் வெற்றி ,அவர் ஒரு போட்டோ ஸ்டுடியோ வச்சுட்டு இருக்காரு, வேம்புக்கு சிலம்பு துறையில் பல சாதனைகளை செய்யணும் ,அப்படின்னு நிறைய கனவுகள் மனசுக்குள்ள இருக்கு ஆனா, அவருடைய அப்பாவோட ஆசைக்காக தன்னுடைய கனவுகளை புறம் தள்ளிட்டு திருமணத்துக்கு சமதமதிக்கறாங்க வேம்பு , திருமணதுக்கு வேம்புயோட வாழ்க்கையில ஒரு மிகப்பெரிய சம்பவம் நடக்குது அதுக்கு பிறகு வேம்புவின் கனவு என்ன ஆச்சு?என்பது தான் வேம்பு படத்தினுடைய மீதி கதை.
கதையின் நாயகனாக வெற்றி என்னும் கதாபாத்திரத்தில் ஹரி கிருஷ்ணன் நடித்திருக்கிறார், இயல்பான கிராமத்து இளைஞனை கண்முன்னே பிரதிபலித்து காட்டும் வகையில் அமைக்கப்பட்ட அவரது கதாபாத்திரத்திற்கு ,தன்னுடைய மிகையில்லாத நடிப்பால மெருகேத்தி இருக்காரு, கதையின் நாயகியாக வேம்பு என்ற கதாபாத்திரத்தில் ஷீலா நடிச்சிருக்காங்க, கனவுகளுக்குள்ளும், யதார்த்த வாழ்க்கைக்குள்ளும் சிக்கித் தவிக்கும் பல இளம் பெண்களின் சாயலை ஒத்த கதாபாத்திரத்தில்,லட்சியத்திற்கும் குடும்பத்திற்கும் இடையே சிக்கி தவிக்கும் மன உணர்வுகளை அழகாக சித்தரிக்கும் வகையில் இயல்பாக நடித்திருக்காங்க ஷீலா,
ஷீலாவின் தந்தையாக ஜெயராவ் ஒரு இயல்பான எளிய கிராமத்து வாழ்வியலை சேர்ந்த தந்தையரின் மன இயல்புகளை வெளிப்படுத்தும் ,சாமானிய மனிதன் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார் .மற்றும் பரியேறும் பெருமாள்,கர்ணன் வாழை போன்ற படங்களில் சிறப்பாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஜானகி இந்தப் படத்திலும் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
.இயக்குனருக்கு பக்கபலமாக, கிராமத்து வாழ்வியலின் காட்சி பிம்பங்களை அச்சு அசலாக நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தும் வண்ணம் ஒளிப்பதிவாளர் ஏ குமரன் காட்சிகளை நன்றாக பதிவு செய்துள்ளார். இவர் ஏற்கனவே தங்க மகன் படத்தில் பணியாற்றியவர் ,அதேபோல மண் சார்ந்த கதாபாத்திரங்களின் உணர்வுகளை சித்தரிக்கும் விதமாக பாடல்களிலும் ,பின்னணி இசையிலும், இசையமைப்பாளர் மணிகண்டன் முரளி சிறப்பாக பணியாற்றியுள்ளார். இவர் இதற்கு முன்பு அதே முகம், மொபைல் போன்ற படங்களில் பணியாற்றியவர்.
என்னதான் நாகரிக உலகத்தில் வாழ்ந்தாலும் ,ஒவ்வொரு மனிதனும், ஏதோ ஒரு விஷயத்தில், ஏதாவது ஒரு செண்டிமெண்ட் வளையத்திற்குள் தான் கட்டுப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றோம், அதிலும் குறிப்பாக தனிப்பட்ட லட்சியம், கனவு ,அதேசமயம் குடும்பம், நம்மைச் சார்ந்தவர்களின் ஆசைகள் இவைகளுக்கிடையே சுழன்றும் ,,உழன்றும் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கின்றோம். இந்த கருத்தை மையமாகக் கொண்டு தந்தை- மகள் உறவு கணவன்- மனைவி உறவு இவர்களுக்கிடையே வாழும் வேம்பு என்னும் இளம் பெண்ணின் கனவு, லட்சியம் இவைகளை அடிப்படையாக வைத்து, அவற்றை உயிரோட்டமுள்ள திரைக்கதை உடன் இணைத்து சிறப்பான படமாக உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் ஜஸ்டின் பிரபு.
சாமானிய மக்களின் வாழ்வியல் பதிவு இந்த வேம்பு.
