வேடுவன் -விமர்சனம்

கண்ணா ரவி ,சஞ்சீவி வெங்கட் ,ஷ்ரவனிதா ஸ்ரீகாந்த், வினுஷா தேவி, ரேகா நாயர், லாவண்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, பவன் இயக்கியுள்ள இந்த சீரிஸ்க்கு விபின் பாஸ்கர் இசையமைத்துள்ளார். .
கதையின் நாயகனான சூரஜ் (கண்ணா ரவி), நடிக்கும் படங்கள் தொடர்ந்து தோல்வி படங்களாக இருக்கும் சூழ்நிலையில் ,ஒரு புதுமுக இயக்குனர் அவரிடம் ஒரு கதை சொல்ல வருகிறார் ,அந்தக் கதையின்படி சூரஜ் ஒரு என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆக உள்ளார் அவருக்கு மேலிடத்தால் கொடுக்கப்படும் பணியின் படி என்கவுண்டர் செய்வதற்கான பணியில் ஈடுபடும் பொழுது அவரது முன்னாள் காதலியை சந்திக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கிறது ,அவர் என்கவுண்டர் செய்ய உள்ள நபர் தனது முன்னாள் காதலியின் கணவர் என்பதும் அவருக்கு தெரிய வருகிறது ,இதன்பிறகு அவர் தனக்கு கொடுக்கப்பட்ட பணியின் படி காதலியின் கணவரை என்கவுண்டர் செய்யும் முடிவிலிருந்து மாறினாரா? இல்லை ?என்கவுண்டர் செய்தாரா ?அதன் பின் என்ன நடந்தது ?.என்பதே மீதி கதை.
இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் சூரஜ் என்னும் கதாபாத்திரத்தில் கண்ணா ர்வி நடித்துள்ளார் ,கதாபாத்திரத்தின்படி அவர் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆக உள்ளதால், பல மாறுபட்ட துணை கதாபாத்திரங்களில் அதற்கே உரிய கெட்டப்புகளுடன் நன்கு நடித்துள்ளார் ,மற்றுமொரு முக்கிய கதாபாத்திரத்தில் சஞ்சீவ் நடித்துள்ளார் இவர் ஏற்றிருக்கக்கூடிய கதாபாத்திரமும் ,அந்த கதாபாத்திரத்துக்கு ஏற்ற நல்ல நடிப்பினை இவர் வழங்கி இருப்பதும் ரசிக்கும்படி உள்ளது ,மேலும் ,ஷ்ரவனிதா ஸ்ரீகாந்த், வினுஷா தேவி, ரேகா நாயர், லாவண்யா போன்றவர்களும் அவரவர் கதாபாத்திரங்களில் மிகை இல்லாத நடிப்பை இயல்பாக கொடுத்துள்ளார்கள்.
பொதுவாகவே சஸ்பென்ஸ் த்ரில்லர் கதைகளுக்கு ஒலி, ஒளியின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது , அந்த வகையில் இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் சீனிவாசன் தேவராஜ் காட்சிகளின் தன்மைகளுக்கு ஏற்ப நிறைவான படப்பதிவினை செய்துள்ளார் ,அதேபோல விபின் பாஸ்கரின் பின்னணி இசையும், காட்சி நகர்வுகளுக்கு ஏற்ற வகையில் இணக்கமாக பயணித்து உள்ளது பாராட்டத்தக்கது.
காதல், கடமை, துரோகம் ஆகிய மனித உணர்வுகளின் ஆழத்தை பற்றி பேசும் வகையில் படத்தில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கதாபாத்திரமும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன. பல ட்விஸ்ட்களுன் பயணிக்கும் இந்த சஸ்பென்ஸ், திரில்லர் தொடரை இயக்குனர் பவன் குமார் சிறப்பாக இயக்கி உள்ளார்.,ரீலும் ரியலும் கலந்த வித்தியாசமான நடிகனின் போராட்ட வாழ்க்கையை சித்தரிக்கும் இந்த கதை,அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் கவரும் வகையில் உள்ளது.
