முழு நீள படத்தையும் ஒருவரே தன் தோளில் தூக்கி சுமந்து இருக்குறாருனு பலப்படங்களில் சிலரை குறிப்பிட்டு சொல்வது உண்டு ,அது இந்த படத்துக்கு நூறு சத விகிதம் பொருந்தும் என்று சொல்லலாம் .ஆம் ஒருவரே படத்தின் 21 துறைகளையும் கையாண்டு வெளிவந்துள்ள படம்தான் இந்த வங்காள விரிகுடா.

அண்ணாச்சின்னு எல்லோராலும் அன்போடு அழைக்கப்படுற தொழிலதிபர் குகன் சக்கரவர்த்தியார் தூத்துக்குடியில் இருக்காரு ,ஒருசமயம் தன்னுடைய குடும்ப வாழ்க்கையில ரொம்ப மன வேதனை அடைந்து கடற்கரையில தனிமையில இருக்கிறப்ப,அவரோட முன்னாள் காதலி கடல்ல குதிச்சு தற்கொலைக்கு முயற்சி செய்றாங்க ,அத பாக்குற அண்ணாச்சி அவங்கள காப்பாத்துறாரு, அதுக்கு அப்புறம் தன்னுடைய காதலிய கொடுமை பண்ற அவளோட கணவனை கொன்னுட்டு,காதலிய தனி வீட்டுல வசிக்க வைக்கிறாரு , தன்னோட பள்ளியில் படிக்கும் மகளை அண்ணாச்சி ஏற்கனவே திருமணம் செஞ்சிருந்தாலும், நாலு வருஷம் கழிச்சு தான் தங்களுக்குள்ள எல்லாமே அப்படின்னு அவங்க சொல்லிடுறதால மனவேதனையில் இருக்கிற அண்ணாச்சி தன்னோட காதலியோட வாழ்ந்துட்டு இருக்காரு, இந்த இந்த சமயத்துல அண்ணாச்சியையும் அவருடைய காதலியையும் போன்ல தொடர்பு கொள்கிற ஒருத்தர் ஒரு விஷயத்தை சொல்லி மிரட்டுறாரு, அதுக்கு பிறகு என்ன நடந்தது ?தன்னை மிரட்டுறவங்கள அண்ணாச்சி கண்டுபிடிச்சாரா? அதுக்கு அப்புறம் அண்ணாச்சி என்ன செய்கிறார் ?பிரிந்திருந்த மனைவியோட மீண்டும் ஒன்று சேர்ந்தாரா? தான் படத்தோட மீதி கதை.
தமிழ் சினிமாவுல ஏற்கனவே நடிகை பானுமதி , இயக்குனர்கள் டி ராஜேந்தர் ,பாக்யராஜ்,பாலுமகேந்திரா ,பார்த்திபன் போன்றவர்கள் ஒரே படத்துல பல துறைகளை கையாண்டு இருக்காங்க ,ஆனா இந்தப் படத்தோட இயக்குனர் குகன் சக்கரவர்த்தியார்,படத்தோட கதாநாயகன், கதை திரைக்கதை,வசனம், பாடல்கள், இசை, ஒலிப்பதிவு,கலை இயக்கம், நடனம் ,ஆடைகள்,ஒப்பனை,பின்னணி இசை , தயாரிப்பு இப்படி பல துறைகளைச் சேர்ந்த 21 துறைகளை தன்னந்தனியாக கையாண்டு, சாதனை படைத்திருக்கிறார். இந்தப் படத்தில் இவர் மட்டும் இல்லாம பொன்னம்பலம் ,வையாபுரி, வாசு விக்ரம் போன்றவங்களும் சில கதாபாத்திரங்களில் நல்லாவே நடிச்சிருக்காங்க.
படத்தோட ஒட்டுமொத்த அனைத்து துறைகளையும் குகன் சக்கரவர்த்தியாரே செய்திருப்பதால், படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தாலும் ,அது அவரையே சாரும், இல்ல வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும் அதுக்கும் அவரே பொறுப்பு .தனிப்பட்ட ஒருவரின் ஆசைகள் லட்சியங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் அவற்றை அவர் நேர்கொள்ளும் முயற்சிகள் இவற்றை அடிப்படையாகக் கொண்ட கதையினை தனி மனிதனாகவே கையாண்டு இந்த படத்தை அவர் உருவாக்கியுள்ளார்.
மொத்தத்தில் இந்த வங்காள விரிகுடா அகன்ற திரை கடலில் தனியாக பயணிக்கும் கலைஞனின் கனவு.
