Sunday, September 20

வல்லவன் வகுத்ததடா விமர்சனம்

நாம் வாழும் இன்றைய சமுதாயத்தில் காணக்கூடிய வகையில் உள்ள கதாபாத்திரங்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை, பரபரப்பான திருப்பங்களுடன் கூடிய ஹைப்பர்லிங் திரைக்கதையில் சொல்லும் க்ரைம் படமாக இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது .கதையில் வரும் கதாபாத்திரங்கள் அனைவருக்கும் ரு ஒரு ஹைப்பர் லிங்க் இணைப்பு இருக்கிறது. அது எப்படியெல்லாம் பயணித்து இறுதியில் ஒரு புள்ளியில் முடிகிறது என்ற அடிப்படையில் இந்த படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் தேஜ் சரண்ராஜ் , ராஜேஷ்பாலச்சந்திரன், அனன்யா மணி, ஸ்வாதி மீனாக்‌ஷி, விக்ரம் ஆதித்யா, ரெஜின் ரோஸ் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.படத்தில் நடித்துள்ள நடிகர்கள், ரசிகர்களுக்கு பெரும்பாலும் புதியவர்களாக இருப்பதால் பெரிய அளவில் கதாபாத்திரங்களுடன் அவர்கள் ஒன்றிப்போய்விடுகிறார்கள். அனைவரின் நடிப்பிலும் குறைகாணமுடியாத வண்ணம் நிறைகளே நிறைந்து காணப்படுகின்றன.

குறிப்பாக ,நடிகர்களில் போலீஸ் இன்ஸ்பெக்டராக நீதிமணி என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ராஜேஷ் பாலச்சந்திரனின் நடிப்பு தனித்தன்மையுடன் நன்கு உள்ளது.

படத்தை இயக்கியிருப்பதோடு தயாரிக்கவும் செய்திருக்கும் விநாயக் துரை, விறுவிறுப்பாக நகரும் ஹைபர் லிங்க் முறையிலான திரைக்கதையில் நல்ல படத்தை உருவாக்கியுள்ளார் .புதியபாணியில் சொல்லப்படும் கதைக்கு மேலும் வலு சேர்க்கும் வண்ணமாக தொழிநுட்ப் கலைஞர்களான ஒளிப்பதிவாளர் கார்த்திக் நல்லமுத்துவும், இசை அமைப்பள்ளர் சகிஷ்னா சேவியரும் தங்களது நிறைவான பங்களிப்பை கொடுத்துள்ளார்கள் ,படத்தொகுப்பாளர் அஜயும் படத்தின் வேகத்துக்கு பெரிதும் உதவியுள்ளார்

புதியவர்களின், புதிய முயற்சியினை பாராட்ட இந்த படத்தை தவறாமல் அனைவரும் பார்க்கலாம்..

Spread the love