Monday, May 4

வாழை-விமர்சனம்:

கதையின் நாயகன் ஒரு கிராமத்தில் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன் சிறுவன் சிவனைந்தன்.சிவனைந்தமும், அவனது நண்பன் சேகரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றார்கள்.பள்ளியின் விடுமுறை நாட்களில் வாழை தார் சுமக்கும் பணிக்கு செல்கிறார்கள். குடும்பத்தின் வறுமை நிலைமைக்காக விருப்பமின்றி அந்த வேலையை செய்யும் சிவனைந்தன்., ஒரு நாள் அந்த வேலைக்கு செல்லாத சமயத்தில் நிகழும் சம்பவதால் நடைப்பவை என்ன? என்பதே படத்தின் மீதி கதை
கதையின் நாயகர்களாக நடித்துள்ள பொன் வேல், ராகுல் இருவரும் இயல்பான நடிப்பை நன்கு வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்கிறார்கள், மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கலையரசன் , திவ்யா துரைசாமி ,டீச்சராக நடித்துள்ள நிகிலா விமல் போன்றோரும் ஏற்று கொண்ட கதாபாத்திரங்களை உணர்ந்து நடித்துள்ளார்கள்.

சந்தோஷ் நாராயணனின் இசை படத்தின் காட்சிகளுக்கு ஏற்ற வகையில் சிறப்பாக அமைந்துள்ளது.கிராமிய வாழ்வியல் கதை களத்தில் உலவும் யதார்த்தமான கதாபாத்திரங்களை உருவாக்கி அதற்க்கு பொருத்தமான நடிகர்களை தேர்வு செய்து படமாக்கியுள்ள மாரி செல்வராஜ் பாராட்டுக்குரியவர் தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு கதையோடு பயணித்து ,வாழ்வியலை பதிவு செய்யும் அரிய பணியில் சிறப்பான ப ங்களிப்பை கொடுத்துள்ளது.

வாழை -திரை ரசிகர்களுக்கு தலை வாழை விருந்து

Spread the love