Monday, April 20

உயிர் தமிழுக்கு – விமர்சனம்

அரசியலும் காதலும் கலந்த கதை களத்தில் .இயக்குநர் அமீர் கதாநாயகனாக நடிக்க மூன் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்துள்ளதுடன் இயக்குநராகவும் அடியெடுத்து வைத்துள்ள படம் . ‘உயிர் தமிழுக்கு’.

கேபிள் டிவி தொழிலில் உள்ள பாண்டியனுக்கு(அமீர்), அரசியல்வாதி ஆனந்தராஜின் மகளான தமிழ் (சாந்தினி ஸ்ரீதரன்)மீது காதல் ஏற்படுகிறது ,அவருக்காகவே பாண்டியனும் தேர்தலில் நிற்கிறார். தமிழும் இவரை காதலிக்கிறார் இந்தக் காதலுக்கு ஆனந்தராஜ் எதிர்ப்பு தெரிவிக்கிறார்.இந்த சூழ் நிலையில் ஆனந்தராஜ் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார். அந்த கொலைக்கு பாண்டியன்தான் காரணம் என அவர் மீது பழி ஏற்படுகிறது, இதன்பின் தமிழ் செல்வியும் பாண்டியனை வெறுக்க ஆரம்பிக்கிறார். குற்றவாளி தான் இல்லை என்பதை பாண்டியன் எப்படி நிரூபித்து தன் மீது கூறப்பட்ட கொலை பழியிலிருந்து மீண்டு வந்தாரா ? உண்மையில் அந்த கொலையை செய்தது யார்? இது போன்ற பல கேள்விகளுக்கு படத்தின் மீதி கதை விடையினை தருகிறது .

கதையின் நாயகனாய் பாண்டியன் என்னும் கதாபாத்திரத்தில் புதுமையான பரிமாணத்தில் அமீரின் நடிப்பை இந்த படத்தில் பார்க்க வாய்ப்பு கிடைக்கிறது. கிடைத்த கதாபாத்திரத்தில் அவரும் தன சிறப்பான நடிப்பய் வெளிப்படித்தியுள்ளார்.கதையின் நாயகியாய் தமிழ் என்னும் கதாபாத்திரத்தில் சாந்தினி ஸ்ரீதரன் நடித்துள்ளார். மேலும் ஆனந்தராஜ், ராஜ் கபூர், இமான் அண்ணாச்சி,மாரிமுத்து ,சரவண சக்தி, கஞ்சா கருப்பு என பல நடிகர்களும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களின் தேவைக்கு ஏற்ப நன்கு நடித்துள்ளார்கள்.

இசை- வித்யாசாகர் ,இவருக்கு சிறு இடைவேளைக்கு பிறகு ரீ-என்ட்ரி படம் என்பதால் அவரது ரசிகர்களுக்கு இந்த பட பாடல்கள் மீது எதிர்பார்ப்பு இருந்திருக்கும் ஆனால் பின்னணி இசை ரசிக்கும்படி இருந்தாலும் பாடல்களில் இன்னமும் கவனம் செலுத்தி இருக்கலாம் .

தேவராஜின் ஒளிப்பதிவும் அசோக்கின் படத்தொகுப்பும் கதைக்கும் ,காட்சிகளுக்கும் ஏற்ப அமைந்துள்ளது

அரசியல் கலந்த காதல் கதைக்கேற்ப காட்சிகளை அமைத்துள்ளார் இயக்குனர் ஆதம்பாவா.

‘உயிர் தமிழுக்கு’-SUMMER TIME PASS

Spread the love