Sunday, May 31

டிரெண்டிங்- திரை விமர்சனம்

டிரெண்டிங்- திரை விமர்சனம்

கலையரசனும், பிரியாலயாவும் காதல் மணம் புரிந்த தம்பதியர்அவர்கள் இருவரும் யூட்யூபில் வீடியோக்களை பதிவேற்றம் செய்து அதன் மூலம் வருமானம் ஈட்டி வருகிறார்கள் ஆனால் ஒரு கட்டத்தில் அவர்களுடைய சேனல் செயலிழக்கப்படுகிறது ,இதனால் அடுத்து என்ன செய்வது தங்களுடைய கடன்களை எப்படி அடைப்பது என்று தவிக்கிறார்கள், அந்த சமயத்தில் அவர்களுக்கு ஒரு மர்ம போன் அழைப்பு வருகிறது, அந்த அழைப்பு அவர்களை ஒரு வித்தியாசமான ,வினோதமான விளையாட்டிற்கு அழைக்கிறது, அதன்படியே இந்த விளையாட்டில் பணத்திற்காக தம்பதியர்கள் ஈடுபட ஆரம்பிக்கிறார்கள், இந்த விளையாட்டில் இருக்கும் டாஸ்க்குகளை அவர்களால் நிறைவேற்ற முடிந்ததா? இதன் மூலம் அவர்கள் தங்களது பிரச்சினைகளில் இருந்து விடுபட்டார்களா ? என்பதை ட்ரெண்டிங் படத்தின் மீதிக்கதை சொல்கிறது.

இதற்கு முன் நிறைய படங்களில் தனது திறமையை கலையரசன் நிரூபித்திருந்தாலும் இந்தப் படத்தில் அவர் அர்ஜுன் என்னும் பிரதான மைய கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார், அவருடைய திரைப்பயணத்தில் இது ஒரு முக்கியமான படமாக அவருக்கு அமையும் . கதாநாயகியாக நடித்துள்ள பிரியாலயா ,கலையரசனுடன் போட்டி போட்டுக் கொண்டு, தன்னுடைய இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி, தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்துள்ளார். மேலும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய கதாபாத்திரத்தில் பிரேம் நன்கு நடித்துள்ளார். பிரவீன் பாலாஜியின் ஒளிப்பதிவு கதை ஓட்டத்துடன் பயணித்து ,காட்சிகளுடன் ரசிகர்களை ஒன்றி போக வைக்கிறது. சாம் சி.எஸ் -ன் பின்னணி இசை படத்தின் காட்சிகளுக்கு மேலும் உறுதுணையாக அமைந்துள்ளது .

அன்றாட வாழ்க்கைக்கு இணையங்களின் , சமூக ஊடகங்களின் தேவைகள் பயன் தரும் வகையில் இருந்தாலும் ,இன்றைய இளைஞர்கள் அத்தகைய இணையமே வாழ்க்கையின் பிரதானம் என்று கொண்டிருக்கக் கூடிய மனப்பான்மையையும், அதனால் ஏற்படக்கூடிய பின் விளைவுகளையும் வெளிப்படுத்தக் கூடிய வகையில் உருவாக்கப்பட்ட கதையினை கொண்டு சிறப்பான படமாக சிவராஜ் இயக்கி உள்ளார் .

இதயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து இதயங்களை இழந்து விட வேண்டாம் ,என்ற கருத்தை வலியுறுத்து வகையில் இந்த ட்ரெண்டிங் உருவாக்கப்பட்டிருக்கிறது. சமூக ஊடகங்கள், இல்லங்களுக்குள் ஊடுருவி , இனிய உறவுகளுக்குள் நுழைவதால் ஏற்படும் சிக்கல்கள், அதனால் ஏற்படும் வாழ்வியல் மாற்றங்களை பேசும் படமாக இந்த ட்ரெண்டிங் உள்ளது.

Spread the love