அறிமுக இயக்குநர் தம்பிதுரை மாரியப்பன் இயக்கத்தில், மெடிக்கல் கிரைம் திரில்லராக உருவாகி இருக்கும் ‘ட்ராமா’ திரைப்படத்தில் விவேக் பிரசன்னா, பூர்ணிமா ரவி, ஆனந்த் நாக், சாந்தினி தமிழரசன், நிழல்கள் ரவி, மாரிமுத்து, பிரதோஷ், ரமா, பிரதீப் கே. விஜயன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். அஜித் ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவை கவனிக்க. ராஜ் பிரதாப் இசையமைத்திருக்கிறார். .
‘ட்ராமா’ திரைப்படத்தில் ஒரு ஆந்தாலஜி மூவி, மூன்று கதை, மூன்று களங்கள். இவை அனைத்தும் இன்டர் லிங்க் மூலம் இணைக்கப்பட்டிருக்கும். வகையில் திரைக்கதை அமைக்கபட்டுள்ளது ,விவேக் பிரசன்னா, சாந்தினி தமிழரசன் தம்பதியருக்கு பல வருடங்களாக குழந்தைபேறு இல்லாமல் இருக்கின்றது, பின்னர் ஒரு கட்டத்தில் சாந்தினி கர்ப்பம் அடைகிறார், மற்றுமொரு இணை கதை களத்தில் ஆட்டோ ஓட்டுநராக உள்ள மாரிமுத்து, அவரது மனைவி ரமாவின் மகளாக பூர்ணிமா உள்ளார் ,அவர் பெட்ரோல் பங்கில் பணிபுரிந்து வருகிறார் ,அவரது காதலன் பிரதோஷ் ,இதோடு ஈஸ்வர் என்பவர் கார் மெக்கானிக் ஆக உள்ளார், இந்த நான்கு கதாபாத்திரங்களும் ஒரு இணைப்பில் வருகிறார்கள் ,மூன்று விதமாக பயணிக்கும் கதைக்களம் இணைக்கப்படும் சம்பவங்களின் தொகுப்பு டிராமா திரைப்படத்தின் மீதி கதையாகும் .
விவேக் பிரசன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்க கூடிய இந்த திரைப்படத்தில் இயல்பானதொரு கதாபாத்திரத்தில் ,சிறப்பாக மன உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் அவர் நன்கு நடித்துள்ளார், அவரது மனைவியாக நடித்திருக்கும் சாந்தினி தனக்கு ஒரு குழந்தை இல்லையே என்ற கவலையுடன் இருக்கும் பொழுதும், அதன் பிறகு தான் கருவுற்று இருப்பது எண்ணி மகிழ்ச்சி அடையும் பொழுதும், அதன் பிறகு நடைபெறும் சம்பவங்களால் ஏற்படும் பாதிப்பின் போதும், தன்னுடைய கதாபாத்திரத்திற்கு ஏற்ற வகையில் நன்றாக நடித்துள்ளார் மற்றும் காதல் இணையர்களாக நடித்திருக்கும் பிரதோஷம் மற்றும் பூர்ணிமா ரவி இருவரும் தத்தம் கதாபாத்திரங்களுக்கு குறைவில்லாத நடிப்பினை கொடுத்து, தங்களுடைய கதாபாத்திரங்களுக்கு பலம் சேர்த்துள்ளார்கள் ,மேலும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆக நடித்திருக்கும் சஞ்சீவ் ,விவேக் பிரசன்னாவின் நண்பனாக நடித்துள்ள ஆனந்தநாக், இவர்களுடன் பிரதீப் K . விஜயன் மற்றும் நிழல்கள் ரவி போன்றவர்களும் தத்தும் கதாபாத்திரங்களில் நன்கு நடித்துள்ளார்கள்.
ஒளிப்பதிவாளர் அஜித் ஸ்ரீனிவாசனின் கேமரா கோணங்களும் , R. S . ராஜ்பிரதாப்பின் பின்னணி இசையும் கதைக்கு தேவையான அளவுக்கு பலம் சேர்த்துள்ளது .
எடுத்துக்கொண்ட ஆந்தாலஜி பட கதைக்கு, இணக்கமான திரைக்கதையினை அமைத்து, ஒரு சிறப்பான ஹைபர் லிங்க் சஸ்பெண்ட் திரில்லர் படத்தை இயக்குனர் தம்பிதுரை மாரியப்பன் கொடுத்துள்ளார். மூன்று கதை ,மூன்று களங்கள் இவை அனைத்தையும் சிறப்பான முறையில் இணைத்து படத்தை கொண்டு சென்றிருப்பது பாராட்டக் கூடியது.
இப்படத்தின் கதையானது ,இன்றைய நவீன உலகில் பேர் சொல்ல ஒரு பிள்ளை வேண்டும் என்று குழந்தை பேறுக்குக்காக தவிக்கும் பெற் றோர்களை குறி வைத்து வியாபாரரீதியாக பெருகியுள்ள சில செயற்கை கருத்தரிப்பு மையங்களின் மோசடியின் பின்னணியை வெளிபடித்தியுள்ளதால், இது போன்று எல்லாம் நடக் கிறதா ? என்ற அச்சம் நிறைந்த கேள்வி உணர்வினை பார்வையாளர்களுக்கு ஏற்படுத்துவதோடு, இதற்க்கெல்லாம் மாற்றாக ,ஆதரவற்ற எத்தனையோ குழந்தைகளில் ஒன்றுக்கு வாழ வழி கொடுக்கலாமே என்ற மெசேஜயும் பதிவு செய்துள்ளது பாராட்டக்கூடியது .
மொத்தத்தில் ட்ராமா பார்க்கலாம் ,ரசிக்கலாம்.
