தமிழ் சினிமாவில் காலம் கடந்தும் பேசும் படங்கள் பல உண்டு ,அந்த வரிசையில் நாயகன் எனும் வெற்றிப் படமும் ஒன்று.. இன்றளவும் பேசக்கூடிய படங்களின் வரிசையில் நாயகனுக்கும் தனி இடம் உண்டு, தற்போதய காலகட்டத்தில் பார்ட் 1, பார்ட் 2 ,பார்ட் 3, பார்ட் 4 இப்படி பல பாகங்கள் வெளிவந்தாலும் நாயகன் பார்ட் 2 அல்லது மணிரத்னம் மற்றும் கமலஹாசன் மீண்டும் இணையவில்லையே என்னும் எதிர்பார்ப்பு பல வருடங்களாக தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் இடம் பெற்று இருந்தது.இந்த கூட்டணி இணைந்து மறுபடியும் ஒரு படம் கொடுக்க மாட்டார்களா என்ற கேள்விக்கு பதிலாக, பல வருடங்கள் கழித்து, கமலஹாசன்- மணிரத்னம் இணைந்துள்ள வெற்றி கூட்டணியில், ஏக எதிர்பார்ப்புகளுடன் வெளியாகி இருக்கிற படம் ‘தக் லைஃப்’.
டெல்லியில தாதாவா இருக்கிற சக்தி வேலையும் அவருடைய அண்ணன் மற்றும் அவர் கூட இருக்குறவர் களையும் பிடிக்க போலீஸ் வருது, போலீசுக்கும் இவர்களுக்கும் நடுவுல துப்பாக்கி சூடு நடக்க, அந்த கலவரத்தில் தன்னுடைய அப்பா இறந்து போக, கூட,பிறந்த நான்கு வயது தங்கச்சியும் பிரிந்து போக ,சின்ன பையனா இருக்கிற அமரனை, சக்திவேல் காப்பாற்றுவதோடு மட்டும் இல்லாம,காணாமல் போன உன்னுடைய தங்கச்சியை எப்படியாவது கண்டுபிடிச்சு தரேன்னு அமரன் கிட்ட சக்திவேல் வாக்கு கொடுக்கிறார், கூடவே கூட்டிட்டு போற அமரன ,சக்திவேல் வளர்க்கிறார், வருடங்கள் கடக்க அமரனும் ஒரு தாதாவா சக்திவேலுக்கு நம்பிக்கை கூறியவரா பக்க பலமாய் இருக்காரு. இந்த நிலையில் தன்னோட அண்ணன் மகள் தற்கொலைக்கு காரணமானவனை சக்திவேல் கொலை செய்ய போலீஸ் அவரை கைது பண்ணி ஜெயிலுக்கு கூட்டிட்டு போறாங்க, ஜெயிலுக்கு போறதுக்கு முன்னாடி நான் வெளியில வர வரைக்கும் அமரன் தான் வழி நடத்துவார்னு சொல்லிட்டு போறாரு, ஒரு கட்டத்துல அமரனுடைய அப்பாவை சுட்டது சக்திவேல் தான் அப்படின்னு அவர் கூட இருக்கிறவங்களே அமரன் கிட்ட சொல்றாங்க ,அவரும் அதை முழுமையா நம்புறாரு. அதுவரைக்கும் சக்திவேலுக்கு அரணாக இருந்தவர் அப்படியே மாறி அவரை எப்படியாவது பழி வாங்கணும்னு நினைக்கிறார் இன்னொரு பக்கம் சக்திவேலுடைய இடத்தை பிடிக்கணும்னு அவரோட அண்ணன் நினைக்க ,இவங்க ரெண்டு பேர் கூடயும் இன்னும் சிலரும் சேர, இவங்களால சக்திவேலுக்கு என்ன ஆச்சு?அவர் குடும்பத்தோட நிலை என்ன? என்கிற கேள்விகளுக்கு விடையாக எதிர்பாராத நிகழ்வுகளுடன் இரண்டாம் பாதி பயணிக்கிறது.
ரங்கராய சக்திவேலாக படத்தில் நடித்திருக்கிற கமலஹாசன், படம் ஆரம்பிச்ச உடனே வரும் சில காட்சிகள்ல இளமை கால கமலை ,அழகா தத்ரூபமா அப்படியே பார்த்த மாதிரி இருக்கிறது , அவருடைய ரசிகர்களையும் மகிழ்விக்கறதோட ,மத்தவங்களையும் ஆச்சரியப்பட வைத்திருக்கு. படம் முழுவதும் அவருக்கே உரித்தான அசாதாரண நடிப்ப மீண்டும் நிரூபித்து, சக்திவேல் கதாபாத்திரமாகவே முழுமையாக பார்க்க முடியுது ,கமல் நடிப்புல மட்டும் இல்லாமல் சண்டைக்காட்சிகலேயேயும் மிகப் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்திருக்கிறார், தோற்றத்தில் மட்டுமே முதுமை தெரிந்திருந்தாலும் ,சண்டைக் காட்சிகள்ல இன்னுமும் அவருடைய வலிமை தெரியுது. சகலகலா நாயகனுக்கே உரித்தான இந்த கதாபாத்திரமும், இந்த படமும் நிச்சயமா அவருக்கும், அவருடைய ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல், வெகுஜன மக்களுக்கும் திருப்தியை ஏற்படுத்தி தரும் வகையில இருக்கு .
இதுவரை இருந்த இமேஜ், மற்றும் தன்னோட Style போன்ற பல விஷயங்களை எல்லாம் விலக்கி வைத்துவிட்டு முற்றிலும் மாறுபட்ட நடிப்பை அமரன் கதாபாத்திரம் மூலம் தன்னோட அளவான, அழகான நடிப்பின் மூலம் வெளிபடுத்தி இருக்கிறார் எஸ்டிஆர்.சண்டைக் காட்சிகளில் ஆக்சன் ஹீரோவாகவும் ,கமலுடன் வரும் காட்சிகள்ல சென்டிமென்ட் ஆகவும் , சில நேரங்களில் ஜாலியாகவும் நடித்திருக்கிற சிம்பு, பழிவாங்கும் எண்ணத்தை கூட ஆர்ப்பாட்டம் இல்லாம , தேவையை தாண்டிய அளவையும் மீறாமல் ,அமரன் கதாபாத்திரமாகவே மாறி நடித்து இருப்பதும் பாராட்டுதலுக்குரியது. சிம்புவின் திரையுலக பயணத்தில் இந்த தக் லைப் படம் அவருக்கு ஒரு தனித்துவமான படமா நிச்சயம் இருக்கும்.
கமலஹாசனுக்கு மனைவியா நடிச்சிருக்க அபிராமி தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை நிறைவா செஞ்சிருக்காங்க, மனைவிக்கே உரிய உரிமையையும் காதலையும்,,அன்பையும் ,அழகாக வெளிப்படுத்தி இருக்காங்க, அதேபோல இந்த படத்தில் திரிஷாவிற்கு ஒரு வித்தியாசமான கதாபாத்திரம் அந்த கதாபாத்திரத்துக்கு தன்னுடைய நடிப்பின் வாயிலாக அவர் மேலும் பலம் சேர்த்துள்ளார். அண்ணன் மாணிக்கமாக வரும் நாசர், மற்றும் வடிவுக்கரசி இருவரும் தங்களது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியு ள்ளார்கள்
போலீஸ் அதிகாரியாக வரும் அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, ஜோஜூ ஜார்ஜ், சின்னி ஜெயந்த், வையாபுரி, என அனைவருமே அவரவர் கதாபாத்திரங்களுக்கு ஏற்ற வகையில் நன்றாக நடித்துள்ளார்கள்
ரவி கே சந்திரனின் ஒளிப்பதிவு படத்தின் காட்சிகளுக்கு இணக்கமான பின்புலத்தினை வலுவான கோண ங்கள் மற்றும் ஒளிஅமீபிக்கு அமைப்பு மூல கொடுத்துள்ளது . திரைவானில் இணைந்து பல படைப்புகளை புதுமையும் பிரமிப்பும் கலந்து கொடுத்து ,ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடித்திருந்த ஏ.ஆர் ரகுமான் மணிரத்னம் காம்போ இந்த படத்திலும் மீண்டும் தங்கள் முத்திரையினை பதித்துள்ளது .‘ஜிங்குச்சா’, ‘அஞ்சுவண்ணப் பூவே’ பாடல்கள் இனிமை.
கேங்ஸ்டர் கதையில் அதற்கான காட்சிகளை திரைக்கதையில் சம்பவங்களாக இணைத்து இருக்கவேண்டும் அதேபோல த்ரிஷாவின் கேரக்கடரும் மைய கதைக்கு தேவையில்லாத கதாபாத்திரமாகவே உள்ளது,.மற்றபடி வழக்கமான கேங்ஸ்டர் கதையாகவே இருந்தாலும் காட்சிகளில் புதுமையுடன் ,கமல்ஹாசன் – சிம்பு என்னும் புதிய கூட்டணியுடன் ,அதில் தன்னுடைய பாணியினையும் கலந்து நிறைவான படமாக மணிரத்னம் படத்தி இயக்கியுள்ளார்
‘தக் லைப்’-ஆக்ஷன் ட்ரீட்
