Friday, January 24

ஜென்டில்மேன்2-வில் இணையும் மற்றுமொரு பிரபலம் தோட்டா தரணி!

மெகா தயாரிப்பாளர் ஜென்டில்மேன் கே. டி. குஞ்சுமோன் தயாரிக்கும் பிரம்மாண்ட படம் ‘ஜென்டில்மேன்2’. இப்படத்தில் இந்தியாவின் புகழ்பெற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் அணிசேர உள்ளதாக அறிவித்திருந்தார். அதன்படி ஏற்கனவே , இயக்குனராக நானி நடித்த ‘ஆஹா கல்யாணம்’ புகழ் ஏ.கோகுல் கிருஷ்ணா,
இசை அமைப்பாளர் ‘பாகுபலி’, ‘RRR’ புகழ் மரகதமணி (எம்.எம்.கீரவாணி), ஒளிப்பதிவாளராக ‘ரட்சகன்’, ‘ருத்ரமாதேவி’, ‘டேம் 999’ புகழ் அஜயன் வின்சென்ட் ஆகியோர் பெயரை அறிவித்தார் கே.டி.குஞ்சுமோன்.


தற்போது ‘ஜென்டில்மேன்2’ கலை இயக்குனராக (Art Director) தோட்டா தரணி பெயரை அறிவித்துள்ளார். இப்படத்தில் தோட்டா தரணியின் மகள் ரோகிணி தரணியும் இணைந்து பணியாற்றுகிறார் என்பது கூடுதல் செய்தி.
நாயகன், தளபதி, சிவாஜி, ருத்ரமாதேவி, குஞ்சுமோன் தயாரிப்பில் ஜென்டில்மேன், காதலன், காதல் தேசம், ரட்சகன் போன்ற பிரம்மாண்ட வெற்றி படங்களுக்கு கலை இயக்குனராக பணியாற்றியவர் இவர். தற்போது, மணிரத்னம் இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன்’ பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜென்டில்மேன் ஃபிலிம் இன்டர் நேஷ்னல் சார்பில் கே.டி.குஞ்சுமோன் தயாரிக்கும் பிரம்மாண்ட படமான ‘ஜென்டில்மேன்2’ வின் கதாநாயகிகளாக நயந்தாரா சக்கரவர்த்தி, ப்ரியா லால் இருவரும் அறிவிக்கப் பட்ட நிலையில்,
கதாநாயகன் யார் என்பது எல்லோரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த அதிர்ஷ்டம் யாருக்கு கிடைக்கும் என்பதும் அனைவருக்கும் எதிர்பார்ப்பு உள்ளது.இது விரைவில் தெரிய வரும் என்று தெரிவித்தார், குஞ்சுமோன்.

Spread the love