இயக்குனர் ரவீந்திர மாதவா இயக்கத்தில் அதர்வா முரளி, அஸ்வின் காகமனு,, லாவண்யா திரிபாதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் தணல் – இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
வேலை எதற்க்கும் போகாமல் எப்போதும் தனது நண்பர்களுடன் ஜாலியாக ஊரை வலம் வரும் அதர்வாவிற்கும் நாயகி லாவண்யாவிற்கும் காதல் ஏற்படுகிறது. வேலையின்றி இருக்கும் அதர்வாவிற்கு பெண் தர முடியாது என லாவண்யாவின் தந்தை அவர்கள் காதலுக்கு மறுப்பு தெரிவிக்கிறார் அதன்பின் காவல்துறையில் கான்ஸ்டபிளாக பணியில் சேருகிறார் புதிதாக காவல்துறை பணியில் சேர்ந்த அதர்வா உள்பட 6 பேர், உயர் அதிகாரியின் கட்டளைபடி ‘ரவுண்ட்ஸ்’ செல்லும்போது அங்குள்ள பாதாள சாக்கடையின் மூடியை திறந்துகொண்டு ஒருவன் வெளியே வந்து ஓடுவதை பார்க்கிறார்கள்.அவன் மீது சந்தேகம் தோன்றி ,போலீசார் அவனை தொடர்ந்து செல்ல ,அவன் அவர்கள் கண்ணிலிருந்து காணாமல் மறைந்துபோக,போலீசார் வியப்பு அடைகிறார்கள் .அப்போது அங்கு வரும் அஷ்வின் காகமனு, அந்த காவல்துறையினரில் ஒருவரை வெட்டி விடுகின்றான் அதன் பின் என்ன நடந்தது ?அவர்கள் யார்?அதன் பின் அதர்வா என்ன செய்கிறார் ?என்பதே படத்தின் மீதி கதை
கதையின் நாயகனாக போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் அதர்வாவிற்கு போலீஸ் கதாபாத்திரம் நன்றாக பொருந்தி போகுமளவிற்கு அவரது உடல் மொழியும், தோற்றமும் அமைந்துள்ளது. ஆக்ஷன் கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பினை அவர் இந்த படத்தில் வெளிப்படித்தியுள்ளார் கதாநாயகி லாவண்யா கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் நன்கு நடித்துள்ளார் .மேலும் படத்தில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய கதாபாத்திரம் அஸ்வின் காகமனு ஏற்று நடித்துள்ள வில்லன் கதாபாத்திரம்தான்.இந்த படம் தொடர்ந்து பல படங்களில் எதிர் மறை கதாபாத்திரங்களை இவருக்கு பெற்று தரும்.
படத்தின் தொழில்நுட்ப பங்களிப்பில் ஒளிப்பதிவாளர் சக்தி சரவணனின் பணி பெரிய அளவில் பாராட்டக்கூடியது ,அதை போலவே படத்தின் வேகத்துக்கு படத்தொகுப்பாளர் கலைவாணனின் பணியும் முக்கியமான காரணமாக உள்ளது.இசை அமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரின் இசை படத்தின் பிளஸ் அம்சங்களில் ஒன்று .விறுவிறுப்பான திரைக்கதையுட.ன் ரவீந்திர மாதவாவின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரில்லர் படம் ரசிகர்களுக்கு சரியான ஆக்ஷன் ட்ரீட் என்று சொல்லலாம்
