தமிழ் சினிமாவில் பல புதுமையான செயல்களை செய்வதோடு ,படத்தின் ப்ரோமோஷன் நிகழ்வுகளில் கூட புதுமைகள் செய்வது ,ஏன் இன்னும் சொல்ல போனால் அவர் கொடுக்கும் பரிசுகளில் கூட பல புதுமைகள் செய்வது என அசத்தி வரும் புதுமை நாயகன் நாயகன் இராதாகிருஷ்ணன் பார்த்திபன், டீன் ஏஜ் குழந்தைகளை மையமாகக் கொண்டு உருவாக்கியுள்ள புதிய சாகச திரில்லர் திரைப்படம்தான் ‘டீன்ஸ்’.
குழந்தைகள் பருவத்திலிருந்து வாலிப பருவத்தினை தொடும் முன்பாக ,பல கனவுகளை மனதில் உழலவிடும் பதின்ம பருவ சிறுவர், சிறுமியர் 13 பேர் மேற்கொள்ளும் சாகசப் பயணத்தின்போது அவர்கள் செல்லும் வழியில் நடைபெறும் ஒரு போராட்டத்தினால் தடம் மாறி காட்டுப்பகுதியில் செல்லுகிறார்கள் .அங்கு ஒவ்வொருவராக காணாமல் தொலைந்து மறைந்து விடுகிறார்கள் அவர்கள் தொலைந்து போவதன் பின்புலம் என்ன ? மற்றவர்களின் நிலை என்ன? இந்த வினாக்களுக்குகான விடையை சொல்லுவதே ‘டீன்ஸ்’ படத்தின் மீதிக்கதை.
படத்தில் நடித்துள்ள சிறுவர் சிறுமியர் அனைவரும் இயக்குனரின் எண்ண ஓட்டங்களை கண்ணாடியில் பிரதிபலிக்கும் பிம்பங்களாக நன்கு நடித்துள்ளார்கள். இன்றைய கால கட்டத்தில் வாழும் சிறுவர்களை அவர்கள் பிரதிபலிப்பதால் ,அவர்களின் வயதுக்கு மீறிய பேச்சுகளும் ,செயல்களும் பெரிதாக குறை சொல்லமுடியவில்லை .புதுமை இயக்குனர் பார்த்திபனின் நடிப்பும் கதாபாத்திரத்துக்கு ஏற்றவண்ணம் நன்றாக உள்ளது . தன் வழக்கமான பாணியில் யோகிபாபும் டீன்ஸில் நடித்துள்ளார் ..
.ஒளிப்பதிவாளர் கவாமிக் யூ.ஆரியின்(GAVEMIC ARY) கேமரா கோணங்கள் கதையின் நிகழ்விடங்களை நன்கு காட்சிப்படித்தியுள்ளது. இமானின் இசையில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய வகையில் பாடல்கள் இல்லாவிட்டாலும் பின்னணி இசையில் நன்றாக ஸ்கோர் செய்துள்ளார்.
டீன் ஏஜ் சிறார்களுடன் கூடிய கதைகளத்தில் பார்த்திபனின் இந்த திரைப்பயணத்தை அவரது புதிய முயற்சிக்காக பாராட்டலாம். பள்ளி விடுமுறை காலத்தில் வெளிவந்திருந்தால் இன்னுமும் வரவேற்பு பெற்று இருக்கலாம்.