ஆயுள் தண்டனைக் கைதியான திலகன் (ஜெயம் ரவி) அப்பா மற்றும் மகளை பார்க்க 14 நாட்கள் பரோலில் தன்னுடைய வீட்டிற்கு வருகிறார்.ஆனால் கொலைகாரனான தன் தந்தை மீது மகள் (யுவினா பார்த்தவி) வெறுப்புடன் உள்ளார் , திலகன் வெளியே வந்த நேரத்தில் தொடர்ந்து பல கொலைகள் நடக்கின்றன , பரோலில் உள்ள திலகன்தான் இந்த கொலைகளுக்கு காரணம் என என காவல்துறை அதிகாரி நந்தினிக்கு(கீர்த்தி சுரேஷ்) சந்தேகம் ஏற்படுகிறது. அந்தக் கொலைகளை யார் செய்தார்கள்? அதற்கான பின்புலம் என்ன என்ன? திலகன் சிறைக்கு செல்வதற்க்கு என்ன காரணம் ? முடிவில் திலகன் தன் மகளுடன் சேர்ந்தாரா? இது போன்ற பல வினாக்களுக்கு விடையினை சொல்லுகிறது இந்த ‘சைரன்’ படத்தின் மீதி கதை.
புதிய வடிவில் ஜெயம் ரவி திலகன் என்னும் கதாபாத்திரத்தில் மகன், தந்தை, கணவன் என பல தரப்பட்ட புதிய பரிமாணங்களில் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் .நந்தினி என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ் தன்னுடைய முந்தைய படங்களிலிருந்து மாறுபட்ட நடிப்பை நன்கு வழங்கியுள்ளார். அனுபமா பரமேஸ்வரன் , அம்மா கதாப்பத்திரத்தில் நடித்துள்ள துளசி மற்றும் சமுத்திரக்கனி, அழகம் பெருமாள், அஜய் என் பலரும் தங்களது கதாபாத்திரத்துக்கு ஏற்ற வகையில் தேவையான நடிப்பை குறைவின்றி கொடுத்துள்ளார்கள்.
ஒளிப்பதிவாளர் செல்வ குமார் ஆர்.கே ,படத்தொகுப்பாளர் ரூபன் பின்ணனி இசை வழங்கியுள்ள சாம் சி.ஸ். போன்றோர் ஆக்ஷன் படத்துக்கு ஏற்ற வகையில் பணியாற்றி, இயக்குனருக்கு பக்க பலமாய் நின்றுள்ளார்கள்.மேலும் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் ‘கண்ணம்மா, கண்ணம்மா பாடலும், ‘நேற்று வரை’ பாடலும் மனதை கவரும் வகையில் உள்ளன.
.சென்டிமென்ட், ஆக்ஷன் கலந்த திரைக்கதையில் ,கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான நடிகர்களை கொண்டு முழு பொழுதுபோக்கு படமாக சைரனை உருவாக்கியுள்ளார் இயக்குநர் பாக்யராஜ் ஆண்டனி.

மொத்தத்தில் சைரன் – முழு நீள பொழுதுபோக்கு ஆக்ஷன் படம் .
