ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் தேசிய மதிப்பீட்டின் முடிவில் தரப்புள்ளிகளின் வரிசையின் அடிப்படையில் ஸ்ரீ சங்கர்லால் சுந்தர் பாய் சசுன் ஜெயின் மகளிர் கல்லூரி 3.64 மதிப்பெண் பெற்று A++ என்ற உயர்தரச் சான்றிணை வல்லுனர்கள் அறிவித்தனர்.

இந்த வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பை சசுன் கல்லூரி குழுமத்தினரும், எஸ் எஸ் ஜெயின் எஜுகேஷன் சொசைட்டி குழுமத்தினரும், கல்லூரி பேராசிரியர்களும், மாணவர்களும் ஒருவருக்கொருவர் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை கொண்டாடினர்…


