சரீரம் படத்தில் தர்ஷன் ,சார்மி , மனோஜ், ஷகிலா புதுப்பேட்டை சுரேஷ் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள் இந்தப் படத்தை இயக்கியிருப்பவர் ஜி.வி.பெருமாள். படத்திற்கு இசை பாரதிராஜா ,ஒளிப்பதிவு டோர்னலா பாஸ்கர் மற்றும் பரணி குமார்.

கல்லூரியில் படிக்கிற பிரியன் (தர்ஷன்) விஜயலட்சுமியை (சார்மி ) காதலிக்கிறாரு , இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தந்தை (புதுப்பேட்டை சுரேஷ்) விஜயலட்சுமியை அவருடைய தாய் மாமனுக்கு (மனோஜ்) திருமணம் செஞ்சு வைக்க முடிவு செய்கிறாரு ,அந்த தாய் மாமன் பிரியனை தாக்கி ஆத்துல தூக்கி வீசிடுராறு ,ஆனால் தன்னுடைய நண்பர்கள் உதவியால காப்பாற்றப்படும் பிரியன் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார், பிரியன் இறந்துட்டாரு நினைக்கிற விஜயலட்சுமி தற்கொலைக்கு முயற்சி செய்ய,அவரும் காப்பாற்றப்பட்டு ,அதே மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறாரு ,அதுக்கப்புறம் ரெண்டு பேரும் அங்கிருந்து மாமல்லபுரத்துக்கு தப்பி போயிடுறாங்க, அங்க பாதுகாப்பா இருக்கிற அவங்க ,இதுக்கப்புறமாவது நிம்மதியாக வாழணுமின்னு நினைச்சி , பாலின மாற்றம் செஞ்சுகிட்டு வாழணும்னு முடிவு செய்றாங்க ,ஆனால் அதற்கு அப்புறமும் அவங்களால அமைதியாக வாழ முடியாமல் நிறைய குறுக்கீடுகள் ஏற்படுது , இந்த நிலைமையில் விஜயலட்சுமி கர்ப்பம் ஆயிடறாங்க ,அதுக்கு பிறகு என்ன நடந்தது ?அவங்களால நிம்மதியாக தொடர்ந்து வாழ முடிந்ததா? என்பது தான் சரீரம் படத்தோட மீதிக்கதை.
இந்த படத்துல பிரியன் என்ற கதாபாத்திரத்தில் தர்சனும், விஜயலட்சுமி என்கிற கதாபாத்திரத்தில் சார்மியும் நடிச்சிருக்காங்க, ரெண்டு பேருமே வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று உங்களுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்காங்க, அதே போல வில்லனா நடிச்சிருக்க மனோஜ், டாக்டர் கதாபாத்திரத்தில் வரும் ஷகீலா, புதுப்பேட்டை சுரேஷ் மற்றும் பலரும் அவரவர் கதாபாத்திரங்களில் குறைவின்றி நிறைவாக நடிச்சிருக்காங்க.
படத்தோட இசையமைப்பாளர் பாரதிராஜா,, ஒளிப்பதிவாளர்கள் டோர்னலா பாஸ்கர் மற்றும் பரணி குமார் இவங்க படத்தின் கதைக்கும் கதாபாத்திரங்களுக்கும் ஏற்றதொரு பின்புலத்தை தரும் தொழில்நுட்ப பங்களிப்பை ஒலி மற்றும் ஒளி வடிவில் நன்கு கொடுத்து இருக்காங்க.
மனதால் ஒன்றுபட்ட காதலர்கள் ஒன்றாக இணைந்து வாழ முடியாமல், அவர்களுடைய காதலுக்கு இடையூறாக சமூக ,பொருளாதார, சாதிய தடைகள் வரும் பொழுது, அவற்றை எதிர்த்து தாங்கள் தொடர்ந்து வாழ பல முடிவுகளை எடுக்கும் கதாபாத்திரங்களை தமிழ் சினிமாவில் நிறைய பார்த்திருக்கிறோம்,ஆனால் இந்தப் படத்தின் காதலர்கள் தாங்கள் தொடர்ந்து நிம்மதியாக வாழ எடுக்கக்கூடிய முடிவானது, முற்றிலும் புதிய முடிவாக இருக்கும் வகையில் படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் ஜி. வி .பெருமாள்.
