Monday, April 20

சப்தம் -விமர்சனம்

சப்தம்- விமர்சனம்
புதிய முயற்சிகளை செய்யும் சில இயக்குனர்களில் ஒருவர் அறிவழகன். தான் சொல்ல வந்த கதையை மட்டும் அல்லாமல் இருக்கிற தொழில்நுட்பத்தை புதுவிதமாக திரைக்கதையில் பயன்படுத்தி, இந்த சப்தம் படத்தையும் இயக்கி இருக்கிருக்கிறார் அறிவழகன்.

புகழ் பெற்ற பழமையான மருத்துவ கல்லூரியில் ஒரு வாரத்திற்குள் சில தற்கொலைகள் நடக்கிறது, . அமானுஷ்ய தீய சக்திகளால் இந்த சம்பவம் நடப்பதாக கல்லூரி நிர்வாகம் சந்தேகம் அடைகிறது, இதை கண்டு பிடிப்பதற்காக மும்பையில் இருந்து ஆதியை வரவழைக்கிறார்கள். இவர் இறந்தவர்கள் பேசுவதை ஒலியின் வழியாக கேட்டு அவர்களின் நிறைவேறாத ஆசைகளை சம்பந்த பட்ட நபர்களிடம் சொல்லி நிறைவேற்றுபவர் தான் ஆதி..

அங்கு பேராசிரியராக வேலை செய்யும் லட்சுமிமேனனிடமும் விசாரிக்கிறார். பல முயற்சிகள் செய்யுற ஆதி பேய் இருப்பதை உறுதிசெய்கிறார். எதனால் அந்த அமானுஷ்ய சக்தி இருக்கிறது, யாரை? ஏன்? எதனால் பழிவாங்குகிறது என்பதுதான் கிளைமாக்ஸ்.

அதிரடி, ஆர்பாட்டம், ரொமான்ஸ் , இப்படி எதுவும் இல்லாமல் அந்த கதாபாத்திரத்திற்க்கு தேவையான நடிப்பை அளவாக வெளிப்படுத்தி இருக்காரு ஆதி, சிறு இடைவெளிக்கு பிறகு நடித்திருக்கும் லட்சுமிமேனன் தனக்கு கொடுக்கபட்ட கேரக்டரை சிறப்பா செஞ்சியிருக்காங்க.

ரெடின் கிங்ஸ்லிஐ இன்னும் கொஞ்சம் பயன்படுத்தி இருக்கலாமேன்னு நினைக்க தோணுது.சிம்ரனின் சாந்தமான நடிப்பும், லைலாவின் வில்லத்தனமான நடிப்பும் யாரும் எதிர்பாராத ஒன்றுதான். மற்றும் எம். எஸ். பாஸ்கர், ராஜீவ் மேனன், விவேக் பிரசன்னா, அபிநயா உட்பட பல நடிகர்களும் கதை நகர்வதற்க்கு காரணிகளாக இருந்தார்கள்.

படத்தின் தலைப்புக்கு ஏத்தமாதிரியே தமனின் இசையும் அமைஞ்சி இருக்கு.. சில இடங்களில் வரும் சப்தம் நமது செவிவழியே பாய்ந்து மூளைக்குள்ளும் சென்று இருக்கு. ஒளிப்பதிவாளர் அருண்பத்மநாபனம் படத்துக்கு ஒரு புதுவிதமான கலர் கொடுத்திருப்பது பலம்.


ஒரு புது முயற்சிக்கு முதல் பலமாக இருந்த தயாரிப்பாளர் 7G சிவா வாழ்த்துக்கள்.

தொழில்நுட்பம் வாயிலாக ஒரு திகில் படம் என்கின்ற அளவில் பார்க்க முடிந்ததே தவிர, ஈரம் மாதிரி ஏனோ மனதில் பதியவில்லை.

ஒலியின் வலிமையை ஒளியின் வாயிலாக வெளிப்படுத்தி ,படக்குழுவினர் நம்மை மிரளவைத்திருக்கிறார்கள்.

Spread the love