இயக்குநர் அனில் கட்ஸ் இயக்கத்தில், மஹா மூவீஸ் தயாரிப்பில் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் நடித்த சைக்காலஜிக்கல் திரில்லர் திரைப்படம் ‘சபரி’
இளம்வயதில் தாயை இழந்த வரலஷ்மி சரத்குமார், பின்னாளில் கணேஷுவெங்கட்ராமை காதலித்து திருமணமும் செய்து கொள்கிறார், அவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது, அதன் பின் கணேஷுவெங்கட்ராமனுடன் பிரிவு ஏற்பட்டு குழந்தையுடன் வெளியேறுகிறார். மனநலமருத்துவமனையிலி ருந்து தப்பிக்கும் மைம்கோபி குழந்தையை கடத்த ,அந்த குழந்தையை மீட்க வரலட்சுமி போராடுகிறார் இறுதியில் என்ன நடந்தது? என்பதே மீதி கதை.
இந்த படத்தில் சஞ்சனா என்னும் கதாபாத்திரத்தில் வரலக்ஷ்மி சரத்குமார் தனது முழு பங்களிப்பை கொடுத்து சிறப்பாக நடித்துள்ளார், படம் முழுவதும் பல பரிமாணங்களில் நடிப்பை வெளிப்படுத்தும் வாய்ப்பை வரலட்சுமி நன்றாக பயன்படுத்தியுள்ளார், மேலும் கணேஷ் வெங்கட்ராம், ஷஷாங்க், மைம் கோபி, சுனைனா, ராஜஸ்ரீ நாயர், மதுநந்தன், ரஷிகா பாலி என பலரும் அவரவர்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களில் நிறைவான நடிப்பை வழங்கி உள்ளனர்.
சைக்கலாஜிக்கல் திரில்லர் ஜானரில் உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தை அறிமுக இயக்குநர் அனில் கட்ஸ் இயக்கியுள்ளதோடு படத்தின் கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றிலும் தன் பங்களிப்பை நன்கு கொடுத்துள்ளார். மஹா மூவீஸுக்காக மகேந்திர நாத் கொண்ட்லா ‘சபரி’ படத்தைத் தயாரித்துள்ளார்.
கோபி சுந்தரின் இசை காட்சிகளுக்கு ஏற்ற வகையில் ரசிக்கும்படி உள்ளது, ராகுல் ஸ்ரீவத்சவ், நானி சமிடிசெட்டியின் ஒளிப்பதிவு படத்தின் திரில்லிங்கான தருணங்களை நன்கு பதிவு செய்துள்ளது.பின்னணி இசையும் ஒளிப்பதிவும் காட்சிகளின் பின்புலத்தை நன்கு வெளிப்படுத்தி கதையோட்டத்தில் பயணிக்க வைக்கிறது.
திரில்லர் ஜானர் கதைகளை விரும்பும் ரசிகர்களுக்கு இந்த சபரி நல்லதொரு காட்சி விருந்து.
