Sunday, April 26

`ரெட்ரோ’- திரை விமர்சனம்

தூத்துக்குடியில கடத்தல் அடிதடி அடாவடிக்கு திலகன் (ஜு ஜு ஜார்ஜ் )அவரோட வளர்ப்பு மகன் பாரிவேல் கண்ணன்.பாரிக்கும் ருக்மணி (பூஜா ஹெக்டே)க்கும் பிறக்கும் காதல் திருமணம் வரை சொல்கிறது தன்னை திருமணம் செய்த பிறகு ரவுடிசத்தை கைவிட்டு வேண்டும் என்னும் காதலின் வேண்டுகோளுக்கிணங்க அதனை கைவிட்டு விட்டு ருக்மணியை கைப்பிடிக்க நினைக்கிறார் பாரி ஆனால் இந்த சூழ்நிலையில் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து கடத்தப்பட்ட கோல்ட் பிஷ் ஒன்று காணாமல் போகிறது அதனை தேடி வளர்ப்பு தந்தை பாரியின் திருமணத்திற்கு வருகிறார், அப்போது நடக்கும் மோதலில் வளர்ப்பு தந்தையின் கையினை பாரி வெட்டி விடுவதால் அந்த திருமணம் நின்று விடுகிறது, ருக்மணியும் பாரியை பிரிந்து விட்டு அந்தமானுக்கு சென்று விடுகிறார்,சிறைக்குச் சென்ற பாரி , சிறையில் இருந்து தப்பித்து, காதலியை தேடி அந்தமானுக்கு செல்கிறார்,காதலியை தேடி செல்லும் பாரி, அந்த தீவுக்கு சிரிப்பு டாக்டராக ஜெயராம் உதவியுடன் செல்கிறார், அங்கு தன்னை பற்றிய நிறைய விஷய ங்களையும் தெரிந்துகொள்கிறார்,  வளர்ப்பு தந்தையின் ஆட்களும் அங்கு பாரியைத் தேடிச் வருகிறார்கள் ,இறுதியில் பாரி காதலியுடன் இணைந்தாரா? இல்லையா ?என்பதுதான் படத்தின் மீது கதை.

கதையின் நாயகன் பாரியாக சூர்யா படம் முழுவதும் பயணிக்க கூடிய மையக்கதாபாத்திரத்தில் காதல் ,ஆக்க்ஷன் இரண்டையும் சம விகிதத்தில் கலந்து கொடுக்கக்கூடிய கதா பாத்திரத்தில் இயல்பாக நடித்திருக்கிறார் ,அவருடைய முந்தைய படங்களில் அவருக்கே உரித்த ட்ரெண்ட் மார்க்கான சில மேனரிசிகள் இந்த படத்தில் இல்லாமல் இருப்பது அவரது ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தை கொடுத்திருக்கலாம் என்று தோன்றுகிறது. சூர்யாவுக்கு இணையாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.அவரது இயல்பான நடிப்பு அவர் ஏற்றி இருக்கும் கதாபாத்திரத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் உள்ளது.வில்லனாக நடித்துள்ள ஜோஜு ஜார்ஜ் , மற்றும் பிரகாஷ்ராஜ், ஜெயராம், நாசர் என பல பிரபல நடிகர்கள் தத்தம் கதாபாத்திரங்களில் அவர்களது அனுபவ நடிப்பை நன்கு வெளிபடித்துள்ளார்கள்.இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை படம் முழுக்க, சிறப்பாக கதையின் காட்சிகளுக்கு பெரும் பலமாக உள்ளது .படம் வெளியாவதற்க்கு முன்பே பெரும் வரவேற்பை பெற்ற‘கனிமா’ பாடல் திரை அரங்குகளில் பெரும் உற்சாகத்தினை ஏற்படுத்துகிறது. ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு படத்துக்கு பெரும் பிளஸ் ஆக அமைந்துள்ளது . கேங்ஸ்டர் டிராமா கதைக்களத்தில் சூர்யாவுடன் கார்த்திக் சுப்பராஜ் இணைந்து உருவாக்கியுள்ள இந்த ரெட்ரோவில் படத்தின் முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பு இரண்டாம் பாதியிலும் இருந்திருந்தால், சூர்யா ரசிகர்களிடையே மட்டுமல்லாது பிற திரை ரசிகர்களிடையேயும் இன்னுமும் பெரிய வரவேற்பை ரெட்ரோ பெற்று இருக்கும்.

Spread the love