Monday, May 25

ரங்கோலி- திரைப்பட விமர்சனம்

சத்யா (‌ஹமரேஷ்‌) அரசு பள்ளியில்‌ படித்து வரும் மாணவன், அவன் தன் நண்பர்களுடன்‌ ஏற்பட்ட பிரச்சனையால் காவல்‌ நிலையத்திற்கு அழைத்துச்‌ செல்லப்படுகிறான்.இந்த பிரச்சனையால் அவன் மீது கோபப்படும் அவனுடைய பெற்றோர்கள் அவனை அரசு பள்ளியிலிருந்து மாற்றி தனியார்‌ பள்ளியில்‌ சேர்க்கிறார்கள். தனது மகனை ஒரு தனியார் பள்ளியில் சேர்க்க அவனது தந்தை கடன் வாங்க , அந்த கடனுக்காக அவனது முழுக் குடும்பமும் கூடுதல் நேரம் வேலை செய்யம் சூழல் ஏற்படுகிறது மறுபுறம்புதிய பள்ளியிலும் சக மாணவர்களால் சத்யாவுக்கு பிரச்சனை ,சண்டை என்று சென்று கொன்று கொண்டிருக்கும் சூழலில் பார்வதியுடன் (பிரார்த்தனா) காதல் என செல்லும் அவனது வாழ்வில் ஏற்படும் பல திருப்பங்களை சொல்லும் வண்ணம் படத்தின் மீதிக்கதை அமைந்துள்ளது.

அரசு பள்ளியில் தமிழில் படிக்கும் மாணவன் சக மாணவ நண்பர்களை பிரிந்து குடும்பத்தின் வற்புறுத்தலால் தனியார் பள்ளிக்கு மாறும் மாணவனுடைய மனநிலை, அங்கு ஆங்கிலத்தில் பயில எப்படி கஷ்டப்படுவான் என்பதை பள்ளி மாணவன் சத்தியவாக ஹமரேஷ் இன்றைய பள்ளி மாணவர்களை பிரதிபலிக்கும் கண்ணாடி போன்ற கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார். அவரது தந்தையாக முருகதாஸும், தாயாக சாய்ஸ்ரீ பிரபாகரனும், அக்காவாக அக்ஷயா ஹரிஹரனும்,பார்வதியாக பிரார்த்தனா சந்தீப்பும் தாங்கள் ஏற்று கொண்ட கதாபாத்திரங்களின் உணர்வுகளுக்கு ஏற்ற வகையில் நிறைவாக நடித்துள்ளார்கள்.

இன்றைய சமூக காலகட்டத்தில் உள்ள பள்ளிகூடங்களின் சூழலையும் பள்ளிக்கு செல்லும் வயதில் உள்ள பெற்றோர்களின் வாழ்வியலையும் சித்தரிக்கும் படத்தை அறிமுக இயக்குனர் வாலி மோகன்தாஸ் சிறப்பாக
உருவாக்கியுள்ளார்.

கதை நடக்கும் வாழ்வியல் சூழலை செவ்வனே பதிவு செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் ஐ.மருதநாயகம். இனிய பாடல்கள் சிறப்பான பின்னணி இசை என படம் முழுவதும் இசையமைப்பாளர் கே.எஸ் சுந்தர மூர்த்தியின் பங்க்ளிப்பு நிறைந்துள்ளது இவர் ஏற்கனவே எட்டு தோட்டாக்கள், ஐரா, ஆகிய படங்களுக்கு இசையமைத்தவர்.

பள்ளி நாட்களின் வாழ்வியலை பதிவு செய்ததன் வாயிலாக ரசிகர்களின் மனதில் ஆழமாய் பதிந்துள்ளது ‘ரங்கோலி’

Spread the love