Thursday, January 15

ராமாயணா: தி லெஜன்ட் ஆஃப் பிரின்ஸ் ராமா – விமர்சனம்

ராமாயணா: தி லெஜன்ட் ஆஃப் பிரின்ஸ் ராமா சினிமா விமர்சனம்

தயாரிப்பாளர்கள் : அர்ஜுன் அகர்வால் – சிபி கார்த்திக் – தமோட்சு கோசானோ
கிரியேட்டிவ் டைரக்டர் : வி.விஜயேந்திர பிரசாத்
நிர்வாக தயாரிப்பு: மோக்ஷா மோட்கில்
இணை தயாரிப்பு : மோகித் குக்ரேட்டி
சீனியர் புரொடியூசர்: ஜானி எமமோட்டோ
கிரியேட்டிவ் புரொடியூசர்ஸ்: மேக்னா தல்வார் – விதாத் ராமன் – அமோன் சுகியிரா -க்ஷிடிஸ் ஸ்ரீவத்ஸா.
தயாரிப்பு நிறுவனம் : கீக் பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட்
வெளியீடு : கீக் பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் – ஏ ஏ, ஃபிலிம்ஸ் – எக்ஸெல் என்டர்டெயின்மென்ட்
பின்னணி குரல் கலைஞர்கள் :
ராமர் – செந்தில்குமார்
சீதை – டி. மகேஸ்வரி
ராவணன் – பிரவீன் குமார்
லட்சுமணன் – தியாகராஜன்
ஹனுமான் – லோகேஷ்
நரேட்டர்- ரவூரி ஹரிதா
மக்கள் தொடர்பு – யுவராஜ்

இராமாயணக் கதையினை நாம் சிறு வயது முதலே கதைகளாகவும் ,நாடகங்களாகவும், திரைப்படங்களாகவும் பல வடிவங்களில் பார்த்து ரசித்திருக்கிறோம். திரைப்படங்களாக வெளிவந்த ராமாயணக் கதை, பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு நடிகர்களை கொண்டு, பல இயக்குனர்களைக் கொண்டு சிறப்பாக காட்சி வடிவில் திரையில் வலம் வந்துள்ளது அதேபோல தமிழ் மற்றும் பிற மொழிகளில் தயாரிக்கப்பட்டு தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட தொலைக்காட்சி தொடர்களாகவும் ராமாயணக் கதை நம் இல்லங்கள் தோதோறும் ழரும் தேடி வந்திருக்கிறது அதனை நாம் நாம் பல்வேறு கால கட்டங்களில் பார்த்து ரசித்திருக்கிறோம் தற்பொழுது அனிமேஷன் வடிவில் வெளியாகி இருக்கும் இந்த ’ராமாயணா : தி லெஜண்ட் ஆஃப் பிரின்ஸ் ராமா’வின் கதையானது புதிய வடிவில் உங்களுக்கு ராமாயண கதையினை சிறப்பாக சொல்லும் விதமாகஉருவாக்கப்பட்டுள்ளது.

இந்தக் கதையில் ராமனின் வாழ்க்கை வரலாறு ,பல்வேறு காலகட்டங்களில் ஆரம்பம் முதல் போர்க்கால இறுதிவரை பல்வேறு காட்சி அமைப்புகளில், கதை களத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது .அரியணை ஏறும் காலகட்டத்தில் எதிரிகளின் சூழ்ச்சியினால் நாடு ,நகரத்தை ,உற்றார் ,உறவினர்களை ,மக்களை விட்டு பிரிந்து வனவாசம் செல்லுகிறார் ராமர் ,அவருடன் செல்லும் சீதை ,ராவணனால் கடத்தப்பட்டு, இலங்கைக்கு கொண்டு செல்லப்படுகிறார். சீதையை மீட்க செல்லும் ராமன். ராவணனுடன் போரிட்டு சீதையை மீட்கிறார் .ராமனுக்கு உறுதுணையாக வானரப் படைகள் பெரிதும் துணை நிற்கின்றன .இப்படியான ராமாயணத்தின் கதையை புதிய தொழில்நுட்பத்தில் நேர்த்தியான முறையில் காட்சிப்படுத்தியுள்ளார்கள்.

அனிமேஷன் திரைப்படங்களில் தோன்றும் கதாபாத்திரங்களுக்கு ஒலி வடிவில் மிகப்பெரிய பங்கினை தருபவர்கள் பின்னணி குரல் கலைஞர்கள். அந்த வரிசையில் இந்த திரைப்படத்தின் மையக் கதாபாத்திரமான ராமர் கதாபாத்திரத்திற்கு செந்தில்குமார் தனது சிறப்பான குரல் வளம் மூலமாக பலம் சேர்த்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களான சீதைக்கு டி. மகேஸ்வரியும் ,ராவணனுக்கு பிரவீன் குமாரும், லக்ஷ்மணனுக்கு தியாகராஜனும் ,அனுமனுக்கு லோகேஸூம் குரல் கொடுத்து அந்தந்த கதாபாத்திரங்களுக்கு வலிமை சேர்த்துள்ளார்கள்.

தெரிந்த கதையின் திருப்பங்களையும், நேர்த்தியான தொழில்நுட்பம் மூலம் ரசித்துப் பார்க்கக் கூடிய வகையில் தரமான அனிமேஷன் தொழில்நுட்பம் இந்த படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது .இயல்பான நடிகர்களை நடிக்க வைத்து உருவாக்கப்படும் படங்களுக்கு நிகரான தரத்துடன் சின்ன குழந்தைகள் முதல் நடுத்தர மற்றும் வயதானவர்களையும் கவரும் வகையில் இந்த திரைப்படம் சிறப்பாக உருவாக்கப் பட்டுள்ளது

Spread the love