Monday, April 20

‘ரெய்டு’ விமர்சனம்

‘ரெய்டு’ படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் விக்ரம் பிரபு நடித்திருக்கிறார். ஸ்ரீதிவ்யா மற்றும் அனந்திகா இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். . மேலும் ரிஷி, செளந்தர்ராஜா, டேனியல், செல்வா, வேலு பிரபாகரன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.2018-ம் ஆண்டில் வெளிவந்த ‘டகரு’ என்ற கன்னடப் படத்தின் தமிழ் ரீமேக்குதான் இந்த ரெய்டு படம்.

ரவுடியிசத்தை விரும்பாத போலீஸ் துணை கமிஷனரான விக்ரம் பிரபு, ரிஷி, செளந்தர்ராஜா, வேலு பிரபாகரன் என்ற 3 ரவுடிகளின் தாதாயிஸத்தை எதிர்க்கிறார் இதனால் ஆத்திரமடையும் ரிஷி விக்ரம் பிரபுவின் காதலியை கொலை செய்துவிட.. அதனால் ஆவேசமடையும் விக்ரம் பிரபு, வில்லன்களைப் பழிதீர்ப்பதே ரெய்டு படத்தின் கதை.

கதையின் நாயகனாய் நடித்துள்ள விக்ரம் பிரபுவுக்கு ஆக்ஷ்ன் கதாபாத்திரத்தில் நடிக்க் கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தியுள்ளார்.

மீண்டும் ஸ்ரீதிவ்யா தமிழ்படத்தில் நடித்துள்ளார்,கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்த்தில் குறை காண முடுயதா அளவுக்கு நடிப்பை வெளிப்படித்துள்ளார் மற்றும் தங்கை கதாப்பாத்திரத்தில் அனத்திகா, வில்லன்களாக
ரிஷியும், செளந்தர்ராஜனும் நடித்துள்ளனர். மேலும்

டேனியல், வேலு பிரபாகரன் போன்றோரும்,போலீஸ் கமிஷனராக நடிகர் செல்வாவும் கதாப்பாத்திரத்தின் தன்மைக்கு ஏற்ற வகையில் நன்கு நடித்துள்ளார்கள்,ஆக்‌ஷன் த்ரில்லர் கதையினை அறிமுக இயக்குநர் கார்த்திக் சிறப்பான நடிகர்களின் துணை கொண்டு படமாக்கியுள்ளார், படத்துக்கு இயக்குனர் முத்தையாவின் வசனங்கள் தனி அடையாளம் தருகின்றன .

தொழில் நுட்பத்தை பொறுத்தவரையில் காட்சிகளுக்கு ஏற்ற ஒளிப்பதிவு, இசை, படத் தொகுப்பு என அமைக்கப்பட்டுள்ளது. எடிட்டர் மணிமாறன்,ஒளிப்பதிவாளர் கதிரவன் போன்றோர் தங்களால் இயன்றளவுக்கு பங்க்ளிப்பை கொடுத்துள்ளார்கள். இசை, பின்னணியிசை பாடல்கள் என சாம் இன்னமும் தன்னுடைய பங்க்ளிப்பைகொடுத்துருக்கலாம் என்றாலும் குறைவின்றி கையாளப்பட்டுள்ளது என்றே சொல்லலாம். திரைக்கதையில் வேகம் கூட்டியிருந்தால் ரெய்டு இன்னமும் ஸ்பீடு ஆக இருந்திருக்கும்.

Spread the love