Friday, April 17

புஷ்பா 2 – விமர்சனம்

புஷ்பா 2 விமர்சனம்

படத்தின் முதல் பாகம் முடிந்த இடத்தில் இருந்தே இரண்டாம் பாகமும் துவங்குகிறது. செம்மரக் கடத்தல் ஜாம்பவானாகிய புஷ்பராஜ்  (அல்லு அர்ஜுன்).தன்னிகரில்லா தலைவனாக இருக்கிறார், புஷ்பராஜின் மனைவியாக ஸ்ரீவள்ளி (ராஷ்மிகா).புஷ்பாவால் தனக்கு ஏற்பட்ட அவமானத்துக்குகாக பழி தீர்க்க நினைக்கும் காவல் அதிகாரி ஷெகாவத் (ஃபஹத் ஃபாசில்).தன்னுடைய கணவன் புஷ்பாவும் ஆந்திர மாநில முதலமைச்சரும் இணைந்து ஒரு புகைப்படம் எடுத்து தும் அந்த புகைப்படத்தை மாட்டி பெருமைப்பட வேண்டும் என்ற மனைவியின் ஆசை. நிராசையாக, கோபமடையும் புஷ்பா, தனக்கு வேண்டிய ஒருவரை முதல்வராக்கி மனைவியின் ஆசையை நிறைவேற்ற நினைக்கிறார் புஷ்பாவின் எண்ணம் ஈடேறியதா? புஷ்பாவுக்கும் ஷெகாவத்துக்கும் ஆன பகை என்னவாயிற்று ? என்பதே ‘புஷ்பா 2’ படத்தின் மீதிக்கதை.

கதையின் நாயகன் புஷ்பாவாக அல்லு அர்ஜுன்…படம் முழுக்க மாஸ் ஹீரோவாக அதிரடி அமர்க்களமான கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார், புஷ்பா 2 வுக்காக காத்து இருந்த ரசிகர்களுக்கு செம ட்ரீட்ஐ அல்லுஅர்ஜூன் கொடுத்துள்ளார்.

ஶ்ரீவள்ளி கதாபாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனா அல்லு அர்ஜூனுக்கு பொருத்தமான இணையாக, ரசிக்கும்படி நடித்துள்ளார். மேலும் பஹத் பாசில் ராவ் ரமேஷ், சுனில், ஜெகபதி பாபு, ஆடுகளம் நரேன் ஆகியோரின் கதாபாத்திரங்களும் அதில் அவர்களது நடிப்பும் நன்கு வெளிப்படுத்தப்பட்டு இருந்தது .


தேவி ஸ்ரீ பிரசாத் பாடல்களும், சாம் சி.எஸ்ஸின் பின்னணி இசையும் படத்தின் காட்சிகளுக்கு பலம் சேர்க்கின்றன. மிரோஸ்லாவ் க்யூபா ப்ரோஸிக்கின் ஒளிப்பதிவும் ,நவீன் நூலியின் படத்தொகுப்பும் .இயக்குனரின் கதையோட்டத்தின் வேகத்துக்கு இணையாக பயணித்துள்ளது.

சிறப்பான திரைக்கதைக்கு ஏற்ற பிரம்மாண்டமான காட்சிகளை, நேர்த்தியான தொழில் நுட்பட குழுவுடன் சேர்த்து, நல்லதொரு பொழுதுபோக்கு படமாக இயக்குர் சுகுமார் இந்த திரைப்படத்தை  கொடுத்துள்ளார்,.ரிலீசுக்கு முன் எக்கசக்க எதிர்பார்புகளை ஏற்படுத்திய இந்த திரைப்படம்,ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில், வெற்றி பெற்றுள்ளது என்று சொல்லலாம்.

Spread the love