போலீஸ் கமிஷனரின் வீட்டில் ஒரு உறுப்பினர் காணாமல் போக.. நகரம் முழுவதும் காவல்துறை அலர்ட் ஆகிறது .தொகுதிக்கு எந்த ஒரு சேவையும் செய்யாத எம்.எல்.ஏ.வைக் கொல்கிறது ஒரு இளைஞர் குழு ,. தன் மகளை ஏமாற்றி கைவிட்ட இளைஞனை வையாபுரி கொலை செய்கிறார்… நாளைய தினம் திருமணமாகிச் செல்லவிருக்கும் டாக்டரின் வீடியோவை வெளியிடுவதாகச் சொல்லி அவரை மிரட்டுகிறான் ஒரு இளைஞன்.. ,தன் மகனின் படிப்பு செவவுக்கு பணம் இல்லாமல் தவிக்கும் ஒப்பனையாளர் . ஒரு அபார்ட்மெண்ட்டில் திருட வரும் திருடர்கள், நைட் டூட்டியில் இருக்கும் இன்ஸ்பெக்டர் என்று பலரை சுற்றி ஓர் இரவில் நடக்கும் சம்பவங்களின் தொகுப்பை களமாக கொண்ட கதைதான் ‘பவுடர்’ திரைப்படம்.
பவுடர் திரைப்படத்தில் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் அறிமுகமாகியிருக்கிறார் புதுமுக நடிகரான நிகில் முருகன்.திரைக்குப்பின்னால் பல சாதனைகளை புரிந்த, புரிந்துகொண்டுள்ள இவர் முதல்முறையாக திரைக்கு முன்னால், நடிகனாக தன் கலை பயணைத்தை துவங்கியுள்ளார் . குறைகாண முடியாத நிறைவான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் என்றே சொல்லலாம், கலைத்துறையில் அவரது புதிய பரிமாணம் மேலும் பல படங்களில் தொடர வாழ்த்துவோம்.
நடிகர் வையாபுரிக்கு இந்த படத்தில் தனது நடிப்புத்திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது அவரும் அதனை திறம்பட பயன்படுத்திக்கொண்டார் என்றே சொல்லலாம்.
இயக்குநர் விஜய்ஸ்ரீஜி.‘பரட்டை’ என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறார் மேலும் படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருக்கும் வித்யா பிரதீப், மொட்டைராஜேந்திரன் ,சிங்கம்புலி ,ஆதவன், சாந்தினி தேவ் என் பலரும் தங்களுக்கு வழங்கப்பட்ட கதாப்பாத்திரங்களில் குறைவின்றி நடித்துள்ளார்கள்
இசையமைப்பாளர் லியாண்டர் லீ மார்டியின் இசையில் காட்சிகளுக்கு இணக்கமான பின்னணி இசையும், ‘சாயம் போன வெண்ணிலவே’ பாடலும் ரசிக்கும்படி உள்ளது ,இரவில் நடக்கும் கதை என்பதால் ஒளிப்பதிவாளரின் பங்கு மிகவும் தேவையானது ,அதன்படி ராஜாபாண்டியும் நன்கு தன் பணியை சிறப்புற செய்துள்ளார் , ஓர் இரவில் நடக்கும் கதைக்கு , வித்தியாசமான க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் தந்து படத்தை இயக்கியுள்ளர் விஜய்ஸ்ரீஜி.