Thursday, April 23

பார்க்கிங் -விமர்சனம்

சென்னையில் வேலை பார்த்து வரும் ஹரிஷ் கல்யாண் , காதலித்து திருமணம் செய்து கொண்ட மனைவி இந்துஜாவுடன் புதிதாக ஒரு வீட்டில் குடியேறுகின்றனர் .அதே வீட்டின் கீழ்தளத்தில் எம்எஸ் பாஸ்கர்(அரசு ஊழியர்) தனது மனைவி, மகளுடன் வசித்துவருகிறார், கர்ப்பமாக இருக்கும் தன் மனைவி இந்துஜாவை வெளியில் அழைத்து கொண்டு செல்ல வசதியாக ஹரிஷ் ஒரு கார் வாங்குகிறார் ஆனால் அந்த காரை பார்க்கிங் செய்வதில் எம்எஸ் பாஸ்கருடன் பிரச்சனை எழுகிறது . அந்த பார்க்கிங் மோதலினால் நகரும் சம்பவங்களே இப்படத்தின் மீதிக்கதை..புதுமுக இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன், முதல் படத்திலேயே தன்னுடைய சிறந்த படைப்பின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கிறார் ,கதாபாத்திரங்களின் உணர்வுகளை நன்கு வெளிப்படுத்தும் சிறப்பான நட்சத்திர தேர்வுகளுடன் அழகாக கதையினை காட்சிப்படித்தியுள்ளார்.

காதல் நாயகனாய் மெல்லிய உணர்வுகளை வெளிப்படுத்திவந்த ஹரிஷ்க்கு ஈஸ்வர் என்ற கதாபாத்திரத்தின் மூலம் இன்றைய கால இளைஞர்களின் எண்ண ஓட்டங்களை பிரதிபலிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது அதை அவரும் நன்கு பயன்படுத்தியுள்ளார், ஹரிஷின் மனைவியாக வரும் இந்துஜா கர்ப்பிணி பெண் கதாபாத்திரத்தில் நிறைவாக நடித்துள்ளார், படத்தின் மைய நாடியாக இளம்பரிதி என்ற கதாபாத்திரத்தில் எம் எஸ் பாஸ்கர் மறுபடியும் தன முத்திரை நடிப்பை பதித்துள்ளார் மேலும்எம்.எஸ்.பாஸ்கரின் மனைவியாக நடித்துள்ள ரமா, மகளாக நடித்திருக்கும் பிரதானா நாதன்,இளவரசு போன்றோரும் தத்தம் கதாபத்திரங்களுக்கு வலு சேர்க்கும் வண்ணம் இயல்பாக நடித்துள்ளார்கள்.சாம் சி.எஸ்.ஸின் இசையும், ஜிஜு சன்னியின் ஒளிப்பதிவும் கதையோடு பயணித்து காட்சிகளுக்கு மேலும் உயிரோட்டம் தரும் வகையில் அமைந்துள்ளது
.
பெருநகரங்களின் வாழ்வியல் சூழலை எதிர்கொள்ளும் கதாபாத்திரங்களின் உணர்வுகளை பதிவு செய்துள்ள இந்த பார்க்கிங் படத்தினை, குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பார்த்து ரசிக்கலாம் .

Spread the love