Monday, August 31

பரம்பொருள்- திரை விமர்சனம்

நோயுற்ற தன்னுடைய தங்கையின் மருத்துவ சிகிச்சை செலவுக்கு பணமின்றி தவிக்க்கும் ஆதி (அமிதாஷ்).  அவரை காப்பாற்ற தேவைப்படும் பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்னும் தீவீர முயற்சியில் திருடும் வேலையில் ஈடுபடும் ஆதி ,காவல் அதிகாரி மைத்ரேயனிடம் (சரத்குமார்) சிக்கிக்கொள்கிறார்.உயிருக்கு போராடும் தன் தங்கயை காப்பாற்ற பணம் வேண்டும் என்னும் நிலையில் இருக்கும் ஆதி, மைத்ரேயனுடன் சேர்ந்து சிலை கடத்தல் வியாபாரத்தில் ஈடுபட முடிவு செய்கிறார்,தன்னுடைய தங்கையின் உடல்நிலை மற்றும் சரத்குமாரின் கட்டாயத்தின் பேரில் இதை ஆதி செய்ய முயற்சிக்கிறார். கடைசியில் அந்த சிலையை எப்படி கடத்தினார்கள்?,அவர்களின் திட்டம் நிறைவேறியதா? என்பது மீதி படத்தின் கதை.

சரத்குமார் போலீஸ் அதிகாரியாக கதாபாத்திரத்துடன் ஒன்றி நடித்திருக்கிறார்.போர்த்தொழிலுக்கு பிறகு இவருக்கு மீண்டும் ஒரு பேர் சொல்லும் படம் இந்த பரம்பொருள் .ஆதியாக நடித்திருக்கும் அமிதாஷ், சரத்குமாருடன் இணைந்து  நிறைவாக நடித்துள்ளார் அவரது காதலியாக நடித்திருக்கும் காஷ்மிரா பர்தேசியும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்துக்கு ஏற்ற வகையில் நன்கு நடித்துள்ளார்

மேலும் இயக்குநர் பாலாஜி சக்திவேல், வின்சென்ட் அசோகன் பாலகிருஷ்ணன் ,சுவாதிகா, என பலரும் கதையின் பல பாத்திரங்களில் குறைவின்றி நடித்திருக்கிறார்கள்.இது போன்ற கதைகளங்களுக்கு பெரிதும் பக்கபலமாய் நிற்கக்கூடிய ஒளிப்பதிவை எஸ்.பாண்டிகுமாரும் ,சிறப்பான பின்னணி இசையினை யுவன் சங்கர் ராஜாவும் வழங்கியுள்ளார்கள் அவரது பாடல்களும் ரசிக்கும்படி உள்ளன, நேர்த்தியான கதைக்கு பொருத்தமான நடிகர்கள், மற்றும் விறுவிறுப்பான திரைக்கதையுடன் இயக்குநர் சி.அரவிந்த் ராஜ் நிறைவான படத்தை கொடுத்துள்ளார்.

.‘பரம்பொருள்’ அனைத்து ரசிகர்களையும் நிச்சயம் கவரும் படம்.

Spread the love