Thursday, April 23

அதர்ஸ் -திரை விமர்சனம்

அறிமுக இயக்குனர் அபின் ஹரிஹரன் இயக்கத்தில் உருவாகியுள்ள அதர்ஸ் படத்தில் ஆதித்யா மாதவன், கௌரி கிஷன், அஞ்சு குரியன், ‘நந்து’ ஜெகன், மற்றும் பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு- அரவிந்த் சிங், இசை- ஜிப்ரான்.

சென்னை சிட்டிக்குள்ள ஒரு வேன் ஆக்சிடெண்ட் ஆகுது . அந்த விபத்துல மூன்று பெண்கள் மற்றும் ஒரு ஆண் என அனைவரும் உடலும் எரிந்த நிலையில சடலங்களாக இருக்குது. இந்த விபத்து பற்றி விசாரிக்க அசிஸ்டன்ட் கமிஷனரா இருக்கிற ஆதித்ய மாதவன், அஞ்சு குரியன் மற்றும் இன்ஸ்பெக்டர் முனீஸ்காந்த் விபத்து நடந்த பகுதிக்கு வராங்க. இந்த விபத்துக்கான தடயங்கள் மற்றும் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் கிடைக்க, இது ஒரு விபத்து இல்லை திட்டமிட்டு செய்யப்பட்டதுன்னு தெரியவருது. இதுக்கான பின்னணி என்னவா இருக்கும் என்று அடுத்த கட்ட விசாரணையை துவங்குறாங்க. இறந்து போன மூன்று பெண்களும் பார்வை இல்லாதவர்கள்ன்னு தெரிய வருது. அதோட இறந்த ஆண் உடலும் வண்டியை ஓட்டிக்கிட்டு வந்த டிரைவரும் வேறன்னு கண்டுபிடிக்குறாங்க. இந்த உடல்களை கேட்டு யாரும் வராததுனால ஆதித்ய மாதவனுடைய சந்தேகம் விரிவடையுது.

பரபரப்பாக நகரம் காட்சிகளுக்குள் போலீஸ் கமிஷனரா இருக்கிற ஆதித்ய மாதவனும் கருத்தரிப்பு ஹாஸ்பிடல் வேலை செய்யற டாக்டர் கௌரியும் காதலிக்கிறாங்க. ஆதித்யா மாதவனும் அவருடைய டீமும் அடுத்தடுத்த கட்டம் நகர ,ஒவ்வொரு முயற்சிகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டு கொலையாளி தப்பித்துக் கொண்டே போகிறான். இதனால ஒட்டுமொத்த பார்வையும் போலீஸ் மீது விழ, சீக்கிரம் குற்றவாளிய பிடிக்கணும்ன்னு அழுத்தம் ஏற்படுத்து. இந்த சூழ்நிலையில கௌரி வேலை செய்ற ஹாஸ்பிடல்ல ஒரு மிகப்பெரிய அசாதாரணமான குற்றம் நடந்துகிட்டு இருக்குற விஷயம் தெரியுது.

ஒரு பக்கம் ஆதித்யா மாதவனுடைய தீவிர விசாரணையும், கொலையாளியின் தேடுதலும் நடக்க ,மறுபக்கம் கௌரி வேலை செய்யுற ஹாஸ்பிடல்ல நடந்த குற்றமும், ஒரு கட்டத்தில் இணைய விறுவிறுப்பான திரைக்கதையோடு காட்சிகள் நகர, கடைசியில் அந்த குற்றவாளியை ஆதித்யா மாதவன் கண்டுபிடிச்சாரா? இல்லையா ? குற்றத்திற்கான நோக்கமும் அதற்கான காரணமும் என்ன? என்பதுதான் அதர்ஸ் படத்துடைய முடிவு.

அதர்ஸ் படத்தின் மூலமா கதாநாயகன அறிமுகம் ஆகி இருக்கிற ஆதித்ய மாதவன் முதல் படத்திலேயே தான் ஏற்று நடித்துள்ள போலீஸ் கதாபாத்திரத்தில் நன்கு நடித்திருக்கிறார். இதுதான் அவருடைய முதல் படம் என்று சொல்ல முடியாத அளவுக்கு அசிஸ்டன்ட் கமிஷனர் கதாபாத்திரத்திற்கு ஏத்த மாதிரி உடலும், உடையும், நடிப்பும், பயமில்லாமல் பதட்டமில்லாமல் தேர்ந்த நடிகர் போல மிகையில்லாத நடிப்பை மிகச் சரியாக வெளிபடித்தியுள்ளார் ஆதித்ய மாதவன். அடுத்து வரக்கூடிய படங்களும் மிகச் சரியான கதைகளும் அமைந்தால் ஆதித்ய மாதவன் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பயணிக்க வாய்ப்பிருக்கும்.
கதாநாயகியாக நடித்திருக்கிற கௌரி கிஷனின் கதாபாத்திரம் , க்ரைம் கதைக்குள் இணைந்து படத்திற்கும் திரைக்கதை பயணத்திற்கும் உறுதுணையாக இருக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கு அதுல அவுங்க நல்லா நடிச்சு இருக்காங்க , படம் முழுக்க கதாநாயகனோடு பயணிக்கிற கதாபாத்திரத்தில் அஞ்சு குரியன் நடிச்சிருக்காங்க. கற்பனைக்காக ஆதித்யாயுடன் டூயட் பாடாமல் இருப்பதும், அது திரைக்கதை ஓட்டத்திற்கு தடையாக இல்லாமல் இருப்பதும் ஆறுதல். கதையோடு பயணிக்கும் அவருடைய கதாப்பாத்திரம் படத்துல முக்கியத்துவமாக அமைந்திருக்கு.வழக்கம்போல நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்காத முனீஷ்காந்துயும், இவரைப் போலவே மாறுபட்ட நடிப்பில் ஜெகன் உடைய நடிப்பும் புதுசு.படத்துல கொலையாளியா நடித்த நடிகரின் பல பரிமாணங்களை கொண்ட நடிப்பும், மற்ற நடிகர்களும் படத்துக்கு பலம்.

ராமரின் படத்தொகுப்பு, ஜிப்ரான் பின்னணி இசை, அரவிந்த் சிங் ஒளிப்பதிவு என்னும் மூவரின் கூட்டணி அதர்ஸ் படத்தின் தொய்வு இல்லாத திரைக்கதைக்கும், விறுவிறுப்பாக காட்சிகள் நகர்வதற்கும் அடித்தளமா அமைந்துருக்குன்னு சொல்லலாம் .பாதிக்கபட்ட ஒரு தனி மனிதனின் கோபம், அவர் எடுக்கும் தவறான முடிவும், அதனால் ஏற்படுகிற குற்றம், சிக்காமல் இருக்க போடும் சூழ்சி என ஒரு முக்கியமான விஷயத்தை கையில் எடுத்து ,மருத்துவ,களத்தில் திரைக்கதை அமைத்து, போலீஸ் கதாபாத்திரம் மூலம் காட்சிகளை நகர்த்தி ,க்ரைம் கதையை அறிமுக இயக்குனர் அபின் ஹரிஹரன் சிறப்பா இயக்கி இருக்காரு.

Spread the love