Monday, May 25

நிழற்குடை – திரைவிமர்சனம்

தேவயானி மைய கதாபாத்திரத்தில் நடிக்க, சிவா ஆறுமுகத்தின் இயக்கத்தில் வெளிவந்துள்ள ,பாசமும் நேசமும் நிறைந்த கதை நிழற்குடை

.விஜித்தும் கண்மணியும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் ,இருவரும் தற்பொழுது ஐடி கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார்கள் இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது இருவரும் வேலைக்கு சென்று விடுவதால் அந்த ,குழந்தையை பார்த்துக் கொள்வதற்காக வைக்கக் கூடிய பெண்ணினால் பிரச்சனை ஒன்று ஏற்பட குழந்தையை பார்த்துக் கொள்வதற்காக முதியோர் இல்லத்தில் உள்ளவர்களை கண்ணும் கருத்துமாக கவனிக்க கூடிய பொறுப்பில் இருக்கும் ஜோதி (தேவயானி )யை தங்களது வீட்டிற்கு அழைத்து வந்து குழந்தையை பாதுகாக்கும் பொறுப்பினை தருகிறார்கள் ,குழந்தையும் ,ஜோதியும் நெருக்கமாக பழகிக் கொண்டிருக்கக்கூடிய வேளையிலே, குழந்தையின் பெற்றோர்களுக்கு பணி நிமித்தமாக அமெரிக்கா செல்லும் வாய்ப்பு கிடைக்கிறது, ஜோதி குழந்தையை விட்டு பிரிந்து எப்படி இருக்க போகிறோமோ என்ற தவிப்பில் இருக்கிறார் ,அந்த சமயத்தில்  குழந்தை காணாமல் போய்விடுகிறது, அந்த குழந்தை யாரால் கடத்தப்பட்டது ? கடைசியில் அந்த குழந்தை கிடைத்ததா இல்லையா என்பது தான் இந்த படத்தின் மீதி .கதை.

பல படங்களில், பலதரப்பட்ட கதாபாத்திரங்களில் தனக்கென ஒரு பாணியில் நடித்துள்ள நடிகை தேவயானி இந்த நிழற்குடை படத்தில் ஜோதிஎன்கின்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ,அன்பும் பாசமும் நிறைந்த கதாபாத்திரத்தில் நிறைவான நடிப்பை வெளிப்படுத்தி படம் பார்க்கும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடிக்கிறார் .விஜித்தும் கண்மணியும் குழந்தையின் பெற்றோராக நடித்திருக்கிறார்கள் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களில் இருவரும் குறைவில்லாத நடிப்பை நிறைவாக வழங்கியிருக்கிறார்கள் மேலும் இளவரசு, வடிவுக்கரசி, ராஜ்கபூர், தர்ஷன் சிவா ,நீலிமா ராணி , ஜி.வி.அஹானா அஸ்னி,நிஹாரிக்கா   போன்றவர்களும் தத்தம் கதாபாத்திரங்களில் நன்றாக நடித்துள்ளார்கள் .

பாசமும் ,நேசமும் நிறைந்த சென்டிமென்ட் காட்சிகள் நிறைந்த உணர்வுபூர்வமான இந்த படத்திற்கு ஆர்.பி. குருதேவ் ஒளிப்பதிவு செய்துள்ளார் .அவர் காட்சிகளுக்கு ஏற்ற வகையில் அழகிய பின்புலத்தை கொடுத்து இயக்குனரின் திரை மொழிக்கு நல்ல காட்சி வடிவம் கொடுத்துள்ளார். படத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்களில் இசையமைப்பாளர் நரேன் பாலகுமார்  சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளார்.

நாம் வாழுகின்ற வாழ்க்கைக்கு பணமும் ,அந்தஸ்தும் எந்த அளவுக்கு முக்கியமானதோ அதே அளவிற்கு பாசமும் நேசமும் நிறைந்த தங்களது வாரிசுகளை அன்புடன் கவனித்துக் கொள்வதும் முக்கியம் ,அவர்களுக்கு நல்லதொரு பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்கி கொடுக்க வேண்டியதும் பெற்றவர்களுடைய கடமை ,பணம் மட்டுமே வாழ்க்கைக்கு பிரதானமில்லை, அன்பும் அரவணைப்பும் அவசியமானது என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில் நல்லதொரு திரைப்படத்தை இயக்குனர் சிவா ஆறுமுகம் கொடுத்துள்ளார்.படத்தின் வசனங்களை ஹிமேஷ் பாலா எழுதியுள்ளார்.

கோடை விடுமுறைக்கு குடை எந்த அளவுக்கு அவசியமோ, அதேபோல் பொழுதுபோக்குக்காக இந்த நிழற்குடையினையும் குடும்பத்தினருடன் அவசியம் பார்த்து ரசிக்கலாம்.

Spread the love