ஆணாக பிறந்த ஒருவர் பெண்ணாக மாறும் உண்மை கதையை எந்த நெருடலும் , விரசமும் இல்லாமல் மிக நேர்த்தியாக, அழகாக, அவர்களின் வலிகளை சொல்லியிருக்கும் படம் நீல நிற சூரியன்.

சின்ன வயசுல இருந்தே அரவிந்த் தன்னை ஒரு பெண்ணாக உணர்கிறார். இந்த விஷயத்தை வெளியே சொல்ல முடியாமல் ஆணாகவும் இருக்க முடியாமல் இருக்கின்றார். வளர்ந்த பிறகு ஒரு school ல teacher- ராக வேலை செய்யுறாரு அரவிந்த்தின் சில நடவடிக்கைகளை பார்த்து சில பேர் கிண்டல் செய்யுறாங்க. இன்னொரு பக்கம் பெண்ணாக மாறுவதற்குக்காக டாக்டர் கிட்ட treatment -யும் எடுத்துகிறார்.
அரவிந்த் க்கு பெண் பார்க்க தனக்கு கல்யாணம் வேண்டாம் என்று சொல்லறாரு. அதோட ஸ்கூல் Principal கிட்ட பெண்ணாக வர permission கேக்குறாரு. ஆனா அவங்க அதற்க்கு மறுப்பதோடு விஷயத்தை correspondet கிட்ட சொல்றாங்க. அவரோ school -க்கு விளம்பரம் கிடைக்கும் என்ற நோக்கத்துல, அரவிந்த பெண்ணாக school வர அனுமதிக்கிறாரு, தன் கூட வேலை செய்யுற தோழி கொடுக்குற support உடன் அரவிந்த் பெண்ணாக மாறி வர வீடும், school-ல இருக்குறவங்களும் அதிர்ந்து போறாங்க. வீட்டுல மட்டும் இல்லாம சில நடைமுறைகளிலும் பல பிரச்சனை வருது. கடைசில அரவிந்த் தான் ஆசைப்பட்ட மாதிரி வாழ முடிஞ்சதா? இல்லையா ? என்பதே படத்தோட முடிவு.
படத்துல அரவிந்த்தாக நடிச்சு இருக்குற சம்யுக்தா விஜயனின் நடிப்பு நிஜமாக இருக்கு. பெண்ணாக மாற முடியவில்லையே என்ற தவிப்பு, பெண்ணாக மாறிய பிறகு, தான் விரும்பும் ஆணிடம் கிடைக்கும் ஏமாற்றம், குழந்தைக்கு ஆசிர்வாதம் பண்ணுங்க என்று சொல்லும் போது வரும் தடுமாற்றம், கடைசியில தன் ஆசைக்காக பொய் சொல்லி விட்டு அழுகின்ற போது என படம் பார்ப்பவர்களை நெகிழ வைத்து இருக்கிறார்.
படத்துல அப்பாவாக வரும் கஜராஜ், அம்மாவாக வெறும் கீதா கைலாசம் போன்றவர்கள் மட்டும் இல்லாம கிட்டி மற்றும் பிற நடிகர்களும் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை மிகை படுத்தாமல் நடிச்சு இருக்காங்க.
ஒளிப்பதிவு, எடிட்டிங், இசை என இவை மூன்றையும் ஒருங்கே அமைத்து இருக்கும் steev benjamin படத்துக்கு பலம்.
ஆர்ட் பிலிம் ஆக இருக்குமோ என்கிற எண்ணத்தோடு அமர்ந்தால் படத்தோட தொடக்க காட்சிகளும் அப்படியே நகர, கடைசியில அடுத்தடுத்து வர காட்சிகள் நமக்குள் இருந்த எண்ணத்தை மாத்தி இருக்கின்றது..பிறப்பு என்பது ஒருவர் முடிவு செய்வது கிடையாது, யாரும் வேண்டும் என்று ஏற்றுக்கொள்வதும் கிடையாது . அது ஒரு இயற்கையின் நிகழ்வு என சொல்லியிருக்கும் படம். இன்னும் பல, பல விருதுகளை பெற படக்குழுவுக்கு வாழ்த்துக்கள்.
