ஹரிஷ் அலக் வின்சு, வி ஜே பப்பு, பாடினி குமார், ஜீவாரவி, பிரவீனா, காத்தே, முருகானந்தம், பிரதீப், மதன் எஸ் ராஜா, சாரதா நந்தகோபால் மற்றும் பலரின் நடிப்பில், சுபராக் முபாரக் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் நறுவீ, தயாரிப்பு: ஏ அழகு பாண்டியன்,இசை: அஸ்வத்,ஒளிப்பதிவு: ஆனந்த ராஜேந்திரன்,பி ஆர் ஓ: ஆர் மணி மதன்.

குன்னூர் மலைப்பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில் இருக்கும் எஸ்டேட் வனப்பகுதிக்கு ஆராய்ச்சி செய்வதற்காக வின்சு ரேச்சல் சாம் தலைமையில் ஒரு ஆராய்ச்சி குழு செல்கிறது அவர்களுக்கு வழிகாட்டியாக உள்ளூர் பெண் ஒருவருடன் ஆராய்ச்சி குழு பயணத்தை தொடர்கிறது அந்த வழிகாட்டி பெண்ணின் மாமாவும் ஆசிரியருமான ஒருவர் சில வருடங்களுக்கு முன்பாக அந்த மலைப்பகுதியில் இருந்து காணாமல் போய்விடுகிறார் அவர் கடுமையான மலை பாதையில் தொலைதூரம் பயணித்து அங்குள்ள பழங்குடி மக்களின் குழந்தைகளுக்கு கல்வி கற்பிப்பதை சேவையாக செய்து வருகிறார் அங்குள்ள பழங்குடி மாணவி ஒருவரின் படிக்கும் ஆர்வத்திற்கு உதவி செய்ய அவர்நினைக்கும் பொழுதில் அவர் திடீரென்று காணாமல் போய்விடுகிறார் பலவிதமான முயற்சிகள் செய்தும் அவரை கண்டுபிடிக்க முடியாமல் போய்விடுகின்றது ,இந்த சூழ்நிலையில் தன்னுடைய தாய் மாமனை எப்படியாவது தேடி கண்டுபிடிக்க வேண்டும் என்ற முடிவுடன் அந்த வழிகாட்டு பெண் ஆராய்ச்சி குழுவுடன் சேர்ந்து செல்கிறார், அப்படி மலை பாதையில் ஆராய்ச்சிக்காக அந்த குழு செல்லும் பொழுது விசித்திரமான பயமுறுத்தக்கூடிய பல சம்பவங்களை அவர்கள் சந்திக்க நேரிடுகிறது, இறுதியில் இதையெல்லாம் தாண்டி அவர்கள் தாங்கள் எதற்காக அங்கு வந்தார்களோ அந்த பணியினை செய்து முடித்தார்களா ? காணாமல் போன அந்த ஆசிரியர் கிடைத்தாரா என்பதே படத்தின் மீதி கதை.
கதையின் நாயகனாக ஹரிஷ் பழங்குடி இன மக்களின் கல்விப் பணிக்காக பாடுபடும் ஆசிரியராக இயல்பான தன் நடிப்பை நான்கு வெளிப்படுத்தி உள்ளார். மற்றும் வின்சு ரேச்சல் சாம், VJ பப்பு ,பாடினி குமார்,. ஜீவா ரவி, கேத்தரின் போன்றவர்களும் அவரவர்கள் கதாபாத்திரங்களுக்கு ஏற்ற வகையில் தங்களது திறமையை வெளிப்படுத்தும் வகையில் நன்றாக நடித்துள்ளார்கள் .மலையும் மலை சார்ந்த பகுதிகளையும் ஆனந்த் ராஜேந்திரனின் ஒளிப்பதிவு அழகாக பதிவு செய்திருக்கிறது,இசையமைப்பாளர் அஸ்வத்தின் பின்னணி இசை கதையின் காட்சிகளுக்கு ஏற்ப சரியான பின்புலத்தை கொடுத்துள்ளது.
சஸ்பென்ஸ் திரில்லர் கதையில் ஒரு சமூக கருத்தையும் சேர்த்து சொல்ல முயன்று இருக்கிறார் இயக்குனர் சுபராக் முபாரக் ,பழங்குடியின மக்களின் வாழ்வியலை ஹாரர் திரில்லர் பவானி திரைக்கதை ஆக்கத்துடன் இணைத்து இந்த படத்தை உருவாக்கி இருக்கும் இயக்குனர், திரைக்கதையில் இன்னமும் வேகத்தையும் விறுவிறுப்பையும் கூட்டி, காட்சி அமைப்புகளில் கவனம் செலுத்தியிருந்தால் அவர் சொல்ல வந்த கல்வி பற்றிய சமூக கருத்து இன்னமும் மேலோங்கி நின்றிருக்கும்.
