Sunday, May 3

நந்திவர்மன்- விமர்சனம்!

பல ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பல்லவ மன்னர்ரான நந்திவர்மன், செஞ்சி அனுமந்தபுரம் பகுதியில் கட்டிஇருந்த பழம்பெரும் சிவன்கோவில் ஒன்று பூமிக்குள் புதைந்திருப்பதையும் , அந்த கோவிலில் புதையல் இருப்பதையும் அறியும் தொல்லியல் துறை,அந்த துறை அதிகாரி போஸ் வெங்கட் தலைமையில் குழு ஒன்றை அங்கு அனுப்பி கள ஆராய்ச்சி மேற்கொள்கிறது .ஆனால் அந்த இடத்தில் ஆராய்ச்சி நடத்திட அந்த பகுதி மக்கள் முட்டுக்கட்டை போடுகிறார்கள்.இதன் பின்பு அந்த ஊரில் சில அசம்பாவித சம்பவங்கள் நடக்கிறது. சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் ரவி, அந்த ஊரில் நடக்கும் மர்ம முடிச்சுகளை களையும் முயற்சியில் ஈடுபடுகிறார் .இறுதியில் தங்கப் புதையல் கண்டுபிடிக்கப்பட்டதா ? இல்லையா? அந்த ஊரில் நடைபெறும் சம்பவங்களுக்கு பிண்ணனி என்ன ? இது போன்ற வினாக்களுக்கு விடை என்ன சொல்லுகிறது? என்பதே நந்திவர்மன் படத்தின் மீதி கதை.

அறிமுக இயக்குநர் ஜி.வி.பெருமாள் வரதன் முதல் முயற்சியில் பாஸ்மார்க் வாங்கி விட்டார் என்றே சொல்லலாம் . சப்-இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் சுரேஷ் ரவி, கதாபாத்திரத்தை உள்வாங்கி திறம்படம் நடித்துள்ளார், நாயகியாக நடித்திருக்கும் ஆஷா வெங்கடேஷ், கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தி, சில காட்சிகளில் நன்கு தன் நடிப்பை வெளிப்படுத்தி தனி கவனம் பெறுகிறார்.

போஸ் வெங்கட்டின் கதாபாத்திரமும் சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது அதில் அவரும் தனது பக்குவப்பட்ட அனுபவ நடிப்பை நன்கு வெளிப்படித்தியுள்ளார் , மேலும் நிழல்கள் ரவி, கஜராஜ், மீசை ராஜேந்திரன், ஆடுகளம் முருகதாஸ், முல்லை கோதண்டம் என் பலரும் தங்களது பங்குக்கு குறைவின்றி நன்கு நடித்துள்ளார்கள்.

ஜெரால்டு ஃபிலிக்ஸ் இசையில் பின்னணி இசை காட்சிகளுடன் இணைந்து நன்கு வழங்கப்பட்டுள்ளது
ஆர்.வி.சேயோன் முத்துவின் ஒளிப்பதிவு படத்தின் காட்சிகளை சிறப்பாக பதிவு செய்துள்ளது

கதைக்கேற்ற வகையில் பிரம்மாண்டமான முறையில் எடுக்கப்பட்டிருந்தால் இந்த ‘நந்திவர்மன்’ நிச்சயம் இன்னமும் ரசிகர்களை கவர்ந்து இருப்பான்.

Spread the love