அறிமுக இயக்குநர் வெண்பா கதிரேசன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் நாளை நமதே.

நாளை நமதே படத்தில் மதுமிதா,வேல்முருகன்,ராஜலிங்கம் ,செந்தில் குமார்,முருகேசன் ,மாரிக்கண்ணு,கோவை உமா,மற்றும் பலர் நடித்துள்ளார்கள். ஒளிப்பதிவு – பிரவீன்,எடிட்டிங் – ஆனந்த் லிங்ககுமார்.இசை – ஹரிகிருஷ்ணன்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தின் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்படுகிறது இந்த முறை அந்த கிராமம் பின் தொகுதி ரிசர்வ் தொகுதியாக அறிவிக்கப்படுகிறது, இதனால் அந்த பஞ்சாயத்து தலைவரின பதவியில் அமர ஆவலுடன் காத்திருந்த மாற்று சமூகத்தை சேர்ந்த ராஜலிங்கத்திற்கு பெருமை ஏமாற்றம் கிடைக்கிறது ஆனாலும் அதிகாரம் தன் கையை விட்டுப் போய் விடக்கூடாது என்ற விருப்பத்தின் பேரில் தனது பண்ணையில் வேலை செய்யும் முருகேசன் என்பவரை போட்டியிட வைக்கிறார் இதன் மூலம் பேருக்கு முருகேசனை தலைவராக வைத்துக்கொண்டு தொடர்ந்து அதிகாரத்தை தன்னுடைய கையிலேயே வைத்துக் கொள்ளலாம் என்று ராஜலிங்கம் திட்டமிடுகிறார், ஆனால் அவரது எண்ணத்திற்கு இடையூறாக ,அதே ஊரில் உள்ள படித்த பெண்ணான மதுமிதா தேர்தலில் போட்டியிட முடிவு செய்கிறார், அவர் வெற்றி பெற்று விடக்கூடாது என்பதை தடுப்பதற்காக நடக்கும் அத்தனை எதிர்ப்புகளையும் மீறி, அவர் தேர்தல் களத்தில் இறங்குகிறார் .அதன் பிறகு என்ன நடந்தது? என்பதுதான் என்ன நடந்தது என்பது தான் மீதி கதை.

படத்தில் கதையின் நாயகியாக மதுமிதா நடித்துள்ளார், ஆதிக்க சக்திகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் அவரது கதாபாத்திரத்தின் தன்மைக்கு பலம் சேர்க்கும் வகையில் அவரது நடிப்பு அமைந்துள்ளது ,எதிர்மறை கதாபாத்திரத்தில் வில்லனாக ராஜலிங்கம் நடித்திருக்கிறார், அதிகார ஆசையும் அதனை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்ற வேட்கையும் கொண்ட கதாபாத்திரத்திற்குரிய நடிப்பினை சிறப்பான முறையில் அவர் வெளிப்படுத்தி உள்ளார். மேலும் இந்த படத்தில் நடிகர்களோடு அசலான கிராமத்து மனிதர்களும் நடித்துள்ளார்கள்.
முழுக்க கிராமத்து பின்னணியில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில் ஒரு கிராமத்து வாழ்வியலை அழகாக காட்சிப்படுத்த ஒளி ப்பதிவாளர் பிரவீனின் பங்களிப்பு உள்ளது ,அதற்கு உறுதுணையாக இசையமைப்பாளர் ஹரி கிருஷ்ணனின் பணியும் சேர்ந்து இயக்குனர் வெண்பா கதிரேசனுக்கு பக்கபலமாக அமைந்துள்ளது. கிராமத்து மனிதர்களின் எளிய வாழ்வியலையும் ,அவர்களது வாழ்க்கையில், அரசியல் ஆளுமைகளின் அழுத்தங்களும் அடிப்படையாகக் கொண்ட கதையில் ,எதார்த்தமான காட்சிகளோடு படமாக்கி உள்ளார் இயக்குனர் வெண்பா கதிரேசன்.
