Tuesday, April 21

மிஸஸ் அண்ட் மிஸ்டர்- திரை விமர்சனம்

வனிதா விஜயகுமார் இயக்க, அவரோடு ராபர்ட் மாஸ்டர்,ஷகிலா, செஃப் தாமு, பாத்திமா பாபு, கிரண், ஸ்ரீமான், ஆர்த்தி, கணேஷ்  மற்றும் பலர் நடிப்பில்  உருவாகியுள்ள படம் மிஸஸ் அண்ட் மிஸ்டர், இந்த படத்துக்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார்.

40 பிளஸ் வயதான தம்பதியரான வனிதாவும் ராபர்ட்டும் பாங்காக்கில் வசிக்கிறார்கள், வனிதாவின் தோழிகள் வாழ்க்கைக்கு மிகவும் தேவை குழந்தை அதனால் குழந்தை பெற்றுக் கொள்ளும்படி வனிதாவிற்கு ஆசையை தூண்டுகிறார்கள்,ஆனால் ராபர்ட்டோ குழந்தையே பெற்றுக் கொள்ள வேண்டாம் என்ற முடிவில் உறுதியாக இருக்கிறார் ,ஆனால் வயதானால் என்ன? தனக்கு குழந்தை வேண்டும் என்பதில் வனிதா உறுதியாக இருக்கிறார் ,இரு மாறுபட்ட கருத்துடையவர்களிடையே இதனால் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது,இறுதியில் வனிதா, தான் ஆசைப்பட்டபடி குழந்தை பெற்றுக் கொண்டாரா? இல்லையா ?என்பதுதான் படத்தின் மீதி கதை.

வயதானாலும் பரவாயில்லை எப்படி ஒரு குழந்தை பெற்றுக் கொண்டே தீர வேண்டும் என்ற ஏக்கத்தையும், ஆசையினையும் பிரதிபலிக்கும் வித்யா என்னும் கதாபாத்திரத்தில் வனிதா விஜயகுமார் நடித்துள்ளார். வனிதாவின் கணவராக அருண் என்னும்  கதாபாத்திரத்தில் ராபர்ட் நடித்துள்ளார்,கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு ஏற்ற வகையில் ,இந்த படத்தில் அவரின் நடிப்பு இந்த படத்தில் அமைந்துள்ளது .

வனிதாவிற்கு அம்மாவாக ஷகீலாவும் ,மற்றும் ஆர்த்தி ,கிரண் பாத்திமா பாபு ,பவர் ஸ்டார, ஸ்ரீமன், செஃப் தாமு ,கணேஷ், கும்தாஜ் என பல நடிக நடிகையர்கள் படம் நெடுக ஆங்காங்கே பல கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் பாடல்களை விட பின்னணி இசை நன்றாக உள்ளது. கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ளார் வனிதா விஜயகுமார், படமாக்க எடுத்துக்கொண்ட கதைக்கும் ,அதற்கு பொருத்தமான வகையில் நடிகர்களை தேர்வு செய்திருப்பதும் சரியான  முறையில் அமைந்திருந்தாலும், இவற்றையெல்லாம் தாங்கி நிற்க போதுமான அளவிற்கு திரைக்கதையில் இன்னமும் வலு சேர்த்து இருக்க வேண்டும். மைய கதாபாத்திரத்தில் வேறு ஒருவரை நடிக்க வைத்திருக்கலாம் அல்லது படத்தை வேறு ஒரு இயக்குனரை வைத்து இயக்க வைத்திருக்கலாம், இரண்டையும் ஒரு சேர வனிதாவே செய்திருப்பதை தவிர்த்து இருக்கலாம் என்று தோன்றுகிறது.

முழு நீள அடல்ட் கன்டன்ட்டை, காமெடியோடு கலந்து படமாக்கி உள்ளதால் இளம் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது இந்த படம்.

Spread the love