சிங்கிள் ஃபாதரான குணசீலன் (அருண் விஜய்) தன்னுடைய மகள் சனாவின் (இயல்) மருத்துவ சிகிச்சைக்காக லண்டனுக்கு செல்கிறார், மருத்துவமனையில் இருக்கும் செவிலி (நிமிஷா சஜயன்) அவர்களுக்கு உதவுகிறார். எதிர்பாராவிதமான சூழ்நிலையொன்றில் ஒரு கொள்ளைக் கும்பலிடம் குணசீலன் மாட்டிக்கொள்கிறார் ,அவர்களுடன் மோதுவதால் அங்குள்ள சிறைக்குச் செல்ல வேண்டி சூழ்நிலை அவருக்கு ஏற்படுகிறது, அதே சிறையில் உள்ள தங்களது ஆட்களைத் தப்பிக்க வைக்க தீவிரவாத கும்பல் ஒன்று, முயற்சி செய்கிறது , அவர்களின் அந்த மிஷன் பூர்த்தி அடைந்ததா?,அருண் விஜயின் குழந்தையுடைய மருத்துவ அறுவை சிகிச்சை நடந்ததா?என்ற வினாக்களுக்கு விடை சொல்லுகிறது மீதி படத்தின் கதை.

அருண் விஜய், மகள் மீது பாசம் காட்டும் காட்சிகளிலும், எதிரிகளிடம் மோதும் ஆக்ஷன் காட்சிகளிலும் நன்கு நடித்துள்ளார் .லண்டன் மருத்துவமனையின் செவிலியர் கதாப்பாத்திரத்தில் நிமிஷா சஜயன் இயல்பாக நடித்துள்ளார் மேலும் எமி ஜாக்சன், பரத் போபண்ணா , அபி ஹாசன், விராஜ் போன்றவர்களின் நிறைவான நடிப்பையும் குறிப்பிட்டு சொல்லலாம்.ஆக்ஷன் கதைகளுக்கேற்ற வேகத்தையும் விறுவிறுப்பையும் தரும் விதமாய் சந்தீப் கே விஜய்யின் ஒளிப்பதிவும், ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசையும் அமைந்துள்ளன.
இந்தப் படத்தின் கதை, திரைக்கதையை மஹாதேவ் எழுதியிருக்கிறார். ஆக்ஷன் ,சென்டிமென்ட் என்று பயணிக்கும் படத்தினை விஜய் இயக்கியுள்ளார் .இந்த அதிரடி ஆக்ஷன் படத்தை பொங்கல் விடுமுறை நாட் களில் குடும்பத்தினருடன் பார்த்து ரசிக்கலாம் .
