Sunday, April 26

மிராய்- திரை விமர்சனம்

கார்த்திக் கட்டம்னேனி இயக்கத்தில் தேஜா சஜ்ஜா மற்றும் மஞ்சு மனோஜ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் மிராய்

இந்திய வரலாற்றில் மிகவும் புகழ் பெற்ற மன்னர்களில் ஒருவரான மாமன்னன் அசோகனின் வாழ்க்கையில் நடந்த மிகப்பெரிய போர் கலிங்கப்போர் , அந்தப் போரினால் ஏற்பட்ட பெரும் அழிவினை எண்ணி மாமன்னன் அசோகர் மனம் வருந்துகிறார் ,அதன் பின் தன்னிடம் உள்ள சக்தியை 9 புத்தகங்களில் அடக்கி அந்த புத்தகங்களை ஒன்பது போர் வீரர்களிடம் ஒப்படைக்கிறார் ,அதன் பின் யுகங்கள் பல கடந்த நிலையில், அந்த புத்தகங்களை அடைந்து இந்த உலகை அழித்துவிட நினைக்கிறார் மகாபீர் (மனோஜ் மஞ்சு)

வரும் காலத்தில் தீயசக்தியால் நிகழவிருக்கும் ஆபத்தை முன்கூட்டியே உணரும் சக்தி படைத்த ஸ்ரேயா சரண் ,அந்த தீய சக்தியை அழிக்க தன் மகனால்தான் முடியும் என்பதை அறிந்து கொள்வதால், அதன்படியே தன் மகன், ராமரின் ஆயுதமான மிராயை அடைந்து, வில்லனை அழித்தொழிக்கவேண்டும் என்பதற்காக அவனை வாரணாசியில் விட்டு விட்டு தனியே சென்றுவிடுகிறார்.

இதன்பின் பல வருடங்கள் கழித்து விபா (ரித்திகா நாயக் )ஸ்ரேயாவின் மகன் வேதாவினை (தேஜா சஜ்ஜா) தேடி வந்து அவனது சக்தியையும் உணர்த்தி, எல்லாவற்றையும் அவனிடம் எடுத்துச் சொல்கிறார் ,அதன்படி 9-வது புத்தகத்தை தீயசக்தி அடைய வரும் போது, தேஜா, மிராய் ஆயுதம் மூலம் 9-வது புத்தகத்தை காப்பாற்ற முடிந்ததா? தீயசக்திகளை அழிக்க அவரால் முடிந்ததா ? என்பதே மீதி கதை.

கதையின் நாயகனான தேஜா சஜ்ஜா ஆக்‌ஷன் ஹீரோவாக நன்கு நடித்துள்ளார் மற்றும் முக்கியமான கதாபாத்திரத்தில் ஸ்ரேயா சரண் ,கதாநாயகியாக ரித்திகா நாயக் , வில்லனாக மனோஜ் மஞ்சு மற்றும் ஜெகபதி பாபு, ஜெயராம் என அனைவரின் நடிப்பிலும் குறை காண இயலாத அளவுக்கு அவர்களின் நடிப்புத்திறன் நன்கு வெளிப்பட்டுள்ளது.

இந்த படத்தின் தொழில்நுட்ப அம்சங்கள் மிகவும் ரசிக்கும்படியும், நம்பகத்தன்மையுடனும் அமைக்கப்பட்டுள்ளன படத்தின் ஒளிப்பதிவாளராகவும் இயக்குநர் கார்த்தி கட்டம்நேனியே பணியாற்றியுள்ளார்.படத்தில் இடம் பெற்றுள்ள பிரம்மாண்ட கழுகு சண்டை காட்சி மிகவும் சிறப்பாக அமைக்கப்பட்டு ,பாராட்டக்கூடிய வகையில் உள்ளது .கௌரா ஹரியின் இசை காட்சிகளுக்கு மேலும் பலம் சேர்த்துள்ளது.

மொத்தத்தில் புராணமும் ,சரித்திரமும் கலந்த இந்த ஃபேண்டஸி கதை ரசிகர்களை மிகவும் கவரும் .

Spread the love