Monday, August 31

மின்மினி- திரை விமர்சனம்

ஊட்டியில் இருக்கும் பள்ளியின் மாணவர் பாரி முகிலன்( கெளரவ் காளை), கால்பந்தாட்ட விளையாட்டில் சிறந்தவராக திகழும் அவருக்கும் ,அப் பள்ளியில் சேரும் புதிய மாணவர் சபரி கார்த்திகேயனுக்கும் (பிரவீன் கிஷோர்) இடையே அடிக்கடி சின்ன சின்ன சண்டைகள் ஏற்பட்டாலும் கடைசியில் நட்பாய் அது முடிகிறது .இந்த நிலையில் எதிர்பாராமல் ஏற்படும் விபத்தினால் சபரியை காப்பாற்ற போய் பாரி இறந்து விடுகிறார் தன்னைக் காப்பாற்றியதால் தான் பாரி இறந்து விடுகிறான் என்று சபரி மனதளவில் பாதிக்கப்பட்டு , நண்பனின் கனவு வாழ்க்கையை நனவாக்கிட தொடங்குகிறார்.இந்த சூழலில் பாரியின் இதயத்தினால் மறுவாழ்வு பெற்ற பிரவீனா (எஸ்தர் அனில்) அதே பள்ளியில் வந்து சேர்கிறார்,இதன் பின் நிகழ்பவைகளே படத்தின் மீதி கதை
படக் கதாபாத்திரங்களின் பள்ளி நாட்கள் காட்சிகளில் நடித்த அதே நடிகர்களை கொண்டு 8 வருடங்கள் கழித்து மீண்டும் பிற காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளது புதிய முயற்சி .சபரி கார்த்திகேயனாக நடித்துள்ள பிரவீன் கிஷோர், பாரி முகிலனாக நடித்துள்ள நடித்துள்ள கெளரவ் காளை, பிரவீனாவாக நடித்துள்ள எஸ்தர் அனில் மூவரின் நடிப்பும் பாராட்டக்கூடியது

கதிஜா ரஹ்மான் இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி இருக்கிறார். அவரது இனிமையான பின்னணி இசையும் மற்றும் மெலோடி பாடல்களும் அவருக்கு நல்லதொரு முகவரியினை கொடுத்துள்ளது.அதேபோல ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு படத்தின்காட்சிகளுக்கு பெரியதொரு பின்புலத்தை சிறப்புற அமைத்து கொடுத்துள்ளது

இயல்பான கதை, தெளிவான திரைக்கதை, பொருத்தமான நட்சத்திரதேர்வு நேர்த்தியான தொழில்நுட்பம் இவற்றோடு படத்தை நன்கு இயக்கியுள்ளார் ஹலிதா சமீம் .

மின்மினி -ஒளிர்கிறது

Spread the love