Tuesday, April 21

மிடில் கிளாஸ் – திரைவிமர்சனம்

கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில் முனீஸ் காந்த், விஜயலட்சுமி, காளி வெங்கட் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் மிடில் கிளாஸ் .

முனீஸ்காந்த் மனைவி விஜயலட்சுமி மற்றும் குழந்தைகள் இருவருடனும் நடுத்தர குடும்பஸ்தனாக வாழ்ந்து வருகிறார் ,தன்னுடைய குறைந்த வருமானத்தில் மனைவி மற்றும் குழந்தைகளின் ஆசைகளை பூர்த்தி செய்ய முடியாத குடும்ப தலைவராக முனிஷ்காந்த் இருக்கிறார், அவருடைய மகளின் விருப்பப்படி ஒரு யூடியூப் சேனல் ஆரம்பிக்கின்றார், இந்த சமயத்தில் அவருக்கு ஒரு கோடி ரூபாய்க்கான செக் கிடைக்கிறது ஆனால் அந்த செக் காணாமல் போய்விடுகிறது, அதன் பிறகு புனிஷ்கா முனீஸ்காந்த் டுகிறார் காணாமல் போன செக் அவருக்கு மீண்டும் கிடைத்ததா? இல்லையா? அதன் பிறகு அவரது வாழ்க்கையில் என்ன நடந்தது ?என்பதை படத்தின் மீதி கதை.

பல திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் ,துணை, இணை கதாபாத்திரங்களிலும் இதுவரை தனது நடிப்புத் திறனை தமிழ் திரைப்படங்களில் கொடுத்துக்கொண்டிருந்த முனீஸ் காந்த் கதையின் நாயகனாக இந்த படத்தில் மிடில் கிளாஸ் குடும்பத் தலைவர்களின் பிரதிபலிப்பாக சிறப்பாக நடித்துள்ளார். படம் பார்க்கும் பல நடுத்தர குடும்பத் தலைவர்களுக்கு தங்களை திரையில் பார்ப்பது போன்ற உணர்வை வெளிப்படுத்தும் வகையில் இவரின் கதாபாத்திரமும் அதனை அவர் ஏற்று நடித்திருப்பதும் சிறப்பாக உள்ளது. இவரது இணையாக அன்பரசி என்னும் கதாபாத்திரத்தில் விஜயலட்சுமி நடித்துள்ளார், சராசரி நடுத்தர குடும்பத்தின் தலைவியாக முனீஸ் காந்த் உடன் போட்டி போட்டுக் கொண்டு தன் பங்குக்கும் இயல்பான நடிப்பை படம் முழுவதும் விஜயலட்சுமி வெளிப்படுத்தி இருக்கிறார் .மேலும் இந்த படத்தில் ராதாரவி, காளி வெங்கட், மாளவிகா அவினாஷ் மற்றும் பலரும் அவரவர் கதாபாத்திரங்களில் குறைவில்லாத நடிப்பை வழங்கி இருக்கிறார்கள்.

யதார்த்தமான வாழ்வியல் கதாபாத்திரங்களை கொண்டு நகரும் கதைக்கு தேவைப்படும் அளவிற்கு படத்தின் காட்சிகளை தன்னுடைய ஒளிப்பதிவால் சிறப்பாக பதிவு செய்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர் சுதர்சன் சீனிவாசன்.பிரணவ் முகர்ஜியின் இசையில் பாடல்கள் கேட்பதற்கும், பார்ப்பதற்கும் இனிமையாக உள்ளன. தன்னுடைய பின்னணி இசையால் காட்சிகளுக்கு தேவையான உணர்வு ஓட்டத்தினையும் பிரணவ் நன்கு கொடுத்திருக்கிறார். இன்றைய சமூகப் பின்னணியில் மனைவி குழந்தைகளுடன் பெருநகரங்களில் வாழும் நடுத்தர குடும்பத் தலைவர்களின தலைவர்களின் அன்றாட வாழ்க்கை சம்பவங்கள் அவர்கள் இந்த சமூ கத்தில் சந்திக்கும் சிக்கல்கள் இவற்றை அடிப்படையாகவும், பிண்ணணியாகவும் கொண்டு கிஷோர் முத்துராமலிங்கம் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். தான் உருவாக்கியுள்ள கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான நட்சத்திர தேர்வினை அவர் சிறப்பாக செய்ததன் மூலமாகவே படத்தின் நகரும் காட்சிகளில் தேவையான உயிரோட்டம் கிடைத்து விடுகிறது .அதேபோல கதையோட்டத்துடன் பயணிக்கும் தொழில்நுட்பாளர்களையும் தன்னுடன் ஒரு சேர சேர்த்துக் கொண்டு கிஷோர் முத்துராமலிங்கம் ஒரு சிறப்பான படத்தை உருவாக்கி இருக்கிறார்.

மொத்தத்தில் இந்த மிடில் கிளாஸ் ஆல் கிளாஸ் மக்களாலும் தவறாமல் பார்க்கப்படவேண்டிய படம்

Spread the love