Monday, May 4

மதிமாறன்- திரைவிமர்சனம்

உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து . என்னும் வள்ளுவரின் குறள் வாக்கினை பேசு பொருளாய் கொண்ட கதை .

கதையின் நாயகன் நெடுமாறன் உயரத்தில் குறைவானவன் ,அதனால் எல்லா இடங்களிலும் மற்றவர்களால் கேலி பேச்சுகளுக்கு ஆளாகிறான். வெளியில் எப்படி இருந்தாலும் வீட்டில் பெற்றோர் மற்றும் சகோதரியின் அன்பும் ஆதரவும் குறைவின்றியே கிடைக்கிறது, இந்த சூழ்நிலையில் கல்லூரியில் படித்து வரும் சகோதரி காணாமல் போய்விடுகிறார் , இதனால் அவரது பெற்றோர் இருவரும் தற்கொலை செய்து கொள்கிறார்கள் , இதன்பிறகு தனது சகோதரியை தேடி சென்னைக்கு செல்கிறார் நெடுமாறன் ,அங்கு தொடர்ச்சியாக பல மர்ம மரணங்கள் நிகழ்கிறது,அந்த மர்ம கொலைகளின் பின்னணி என்ன?, வீட்டில் இருந்து வெளியேறிய நாயகனின் சகோதரிக்கு என்ன நடந்தது ? என்பதே மதிமாறன் படத்தில் கதை.

கதையின் நாயகன் நெடுமாறனாக நடித்திருக்கும் வெங்கட் செங்குட்டுவன், கதாபாத்திரத்தினை உள்வாங்கி சிறப்பாக நடித்துள்ளார் .

’லவ் டுடே’ இவானா, புதிய பரிமாணத்தில் நடிப்பை வெளிப்படுத்தும் கதாபாத்திரத்தில் நிறைவாக நடித்துள்ளார் .மற்றும் ஆராத்யா , எம்.எஸ்.பாஸ்கர் ,ஆடுகளம் நரேன், பவா செல்லதுரைஎன் அனைவரும் தத்தம் நடிப்பில் சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளார்கள்.

சமூக வாழ்வியலை சாமான்ய கதாபாத்திரங்ககளை கொண்டு வடிவமைத்து, அத்துடன் சீரிய திரைக்கதையுடன் மதிமாறனை உருவாக்கியுள்ளார் இயக்குனர் மந்திர வீரபாண்டியன். அவரின் எண்ண ஓட்டத்துக்கு பக்க பலமாய் பர்வேஸின் ஒளிப்பதிவும், கார்த்திக் ராஜாவின் இசையும் துணை நின்றுள்ளது

‘மதிமாறன்’ – ரசிகர்களின் மனதுக்கு நெருக்கமானவன்.

Spread the love