Monday, June 1

மத்தகம்- விமர்சனம்

இயக்குநர் பிரசாத் முருகேசன் இயக்கத்தில், நடிகர்கள் அதர்வா, மணிகண்டன், நிகிலா விமல் மற்றும் DD நடிப்பில் உருவாகியுள்ள ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸ் “மத்தகம்” டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீம் ஆகியுள்ளது. Screen Scene Media Entertainment நிறுவனம் தயாரித்துள்ளது


சென்னையில் நடைபெறும் இரவு நேர வாகன சோதனை போலீஸ் அதிகாரியான அதர்வா (அஸ்வத்) தலைமையில் நட க்கிறது, அந்த இரவு நேர வாகன சோதனையில் சங்கு கணேஷ் என்கிற ரவுடி சிக்குகிறான், அவனிடம் விசாரிக்கும்போது பல அதிர்ச்சியான தகவல்கள் தெரியவருகிறது. அந்தத்தவல்களின்படி இரண்டு வருடங்களுக்கு முன் இறந்துபோனதாக கருதப்படும் படாளம் சேகர் தற்போதும் உயிரோடு இருப்பதும், மறுநாள் இரவு நடக்கும் அவனது பிறந்த நாள் விழாவுக்கு மொத்த ரௌடிகளும் கலந்து கொள்ள வர இருப்பதும் இருப்பது தெரியவருகிறது.ஒட்டுமொத்த ரௌடிகளையும் ஒன்று சேர்த்து ஏதோஒரு பெரிய சம்பவம் நிகழ்த்த போவதாகவும் சங்கு கணேஷ் கூறுகிறான். படாளம் சேகர் பிறந்த நாள் விழாவில் என்ன நடக்கப்போகிறது ? அந்த சம்பவத்தை அஸ்வத்தால் தடுத்து நிறுத்த முடிந்ததா? என்பதே மீதி கதையாக என்பது தொடரும் பகுதிகளில் பார்க்கலாம்

நேர்மையான போலீஸ் அதிகாரியாக அதர்வா மிடுக்கான உடல்மொழியோடு கதாபாத்திரத்துக்கு கச்சிதமாக பொருந்தி நன்கு நடித்துள்ளார் . ஜெய்பீம் ,குட் நைட் படங்களில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருந்த மணிகண்டன் படாளம் சேகர் என்னும் நிழல் உலக தாதா கதாபாத்திரத்தில் முதன் முறையாக வில்லனாக புதியபரிமாணத்தில் நடித்துள்ளார் ,மேலும் நிகிலா விமல்,கவுதம் மேனன், தில்னாஸ் இராணி, இளவரசு, டிடி, வடிவுக்கரசி, அருவி திருநாவுக்கரசு, மூணாறு ரமேஷ், சரத் ரவி, ரிஷி காந்த் மற்றும் முரளி அப்பாஸ் என ஏராளமானோர் இத் தொடரில் அவரவர்களுக்கு கொடுக்கப்பட்ட பாத்திரங்களின் தன்மைக்கு ஏற்ப நன்கு நடித்துள்ளனர்.

இயக்குனர் பிரசாத் முருகேசன் நல்லதொரு திரில்லர் கதையை உருவாக்கி, கதாபாத்திரங்களுக்கு ஏற்பட்ட நட்சத்திரங்களுடன் சிறப்பான முறையில் இந்த தொடரை வழங்கியுள்ளார் , இத்தொடருக்கு இசை வடிவம் கொடுத்துள்ள தர்புகா சிவாவும், இரவு நேரக்காட்சிகளை சிறப்புற காட்சிப்படித்தியுள்ள ஒளிப்பதிவாளர் எட்வின் சாகேவும் இயக்குனருக்கு பக்கபலமாய் நின்றுள்ளார்கள் .

திரில்லர் கதை விரும்பிகளுக்கு நல்லதொரு திரைவிருந்து .

Spread the love