விதார்த் ,ரக்ஷனா ,அருள்தாஸ் ,மாறன் ,தினந்தோறும் நாகராஜ் ,சரவண சுப்பையா மற்றும் பலர் நடிப்பில் V கஜேந்திரன் இயக்கியுள்ள திரைப்படம் மருதம் ,இந்த படத்துக்கு இசை : என்.ஆர். ரகுநந்தன்,ஒளிப்பதிவு :அருள் K சோமசுந்தரம்.
அளவான குடும்ப உறுப்பினர்களோடு கிராமம் ஒன்றில் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் கன்னியப்பன் என்னும் விவசாயியாக விதார்த் உள்ளார் , வாழ்வாதாரத்திற்காக விவசாயத்தையே அவரது குடும்பம் நம்பியுள்ளது ,இந்த நிலையில் அவருக்கே தெரியாமல் அவர் வாங்காத ஒரு கடனுக்காக அவரது நிலம் ஏலம் விடப்படுகிறது ,இதனால் அதிர்ச்சி அடையும் விதார்த்த தன் நிலத்தை மீட்க முயற்சி எடுத்தாலும் அவரது தந்தையின் பெயரில் வாங்கப்பட்ட கடனை திருப்பி தராததால் அவரது நிலம் ஏலத்தில் விடப்பட்டதாக தகவல் கிடைக்கிறது ஆனால் தன் தந்தை எந்த கடனையும் வாங்கவில்லை என்று விதார்த் என்னத்தான் விளக்கம் கொடுத்தாலும் அதற்கு தேவையான ,எந்த விதமான ஆதாரங்களும் இல்லாததால் தன்னுடைய வாழ்வியலின் அடிப்படை ஆதாரமான நிலத்தை இழந்து தவிக்கிறார், இதன்பிறகு சட்டப் போராட்டத்தின் மூலம் தன் நிலத்தின் மீட்க வழக்கறிஞர் தினந்தோறும் நாகராஜ் மூலம் வழக்கு தொடுக்கிறார், இறுதியில் அவரால் தன்னுடைய நிலத்தை மீண்டும் மீட்க முடிந்ததா? இல்லையா ?என்னும் கேள்விகளுக்கு விடையினை மீதி கதை சொல்கிறது.

கன்னியப்பன் என்னும் விவசாயி கதாபாத்திரத்தில் நடுத்தர சராசரி மனிதனை பிரதிபலிக்கும் விதமாக விதார்த் சிறப்பாக நடித்திருக்கிறார் ,ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்திற்கு இணக்கமான நடிப்பினை அவர் அருமையாக வெளிப்படுத்தி இருந்தார் ,ரக்ஷனா விதார்த்தத்திற்கு இணையாக இந்த படத்தில் தன்னுடைய யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி சிந்தாமல்லி என்னும் கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்துள்ளார் ,மேலும் வழக்கறிஞராக தினந்தோறும் நாகராஜ் ,அருள்தாஸ் ,சரவணா சுப்பையா, மாறன் போன்றவர்களும் அவரவர் கதாபாத்திரங்களில் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்கள்.

திரைக்கதைக்கேற்ற பின்னணி இசை, காட்சிகளுக்கேற்ற பாடல்கள் என இசை அமைப்பாளர் என் .ஆர் . ரகுநந்தனின் இசை நன்கு அமைந்துள்ளது , காட்சிகளின் தன்மைக்கு ஏற்ப அழகிய சூழலை பதிவு செய்துள்ளது.அருள் K சோமசுந்தரத்தின் கேமரா,மேலும் கிராமங்களின் அன்றாட வாழ்வியல் சூழ்ந்த கதை களத்தினை எடுத்துக்கொண்டு ,அதில் யதார்த்தமான கதை மாந்தர்களை அமைத்து,, அதனோடு மக்களுக்கு விழிப்புணர்வு தரும் காட்சிகளையும் இணைத்து ,ஒரு நிறைவான படமாக இயக்கியிருக்கிறார் இயக்குனர் பி கஜேந்திரன். பெருகிவரும் நவ நாகரிக சூழலினால் ஏற்கனவே குறைந்து கொண்டும் ,அழிந்து கொண்டும் இருந்தாலும் ,இன்னமும் விவசாய தொழிலை விடாமல் செய்து கொண்டிருக்கும் மக்களுக்கு ஏற்படும் இன்னல்களை, கதை வாயிலாக பதிவு செய்துள்ளது பாராட்டக்கூடியதாக உள்ளது .
மொத்தத்தில் வயலும் ,வயல் சார்ந்த பகுதிகள் மருதம் எனப்படுவைத்து போல கதையும், கருத்தும் சார்ந்த படமாக இந்த மருதம் அமைந்துள்ளது .
