Saturday, December 6

மனிதர்கள் -திரை விமர்சனம்

அறிமுக இயக்குனர் ராம் இந்திரா இயக்கத்தில் வெளிவந்துள்ள திரைப்படம் மனிதர்கள், இந்த திரைப்படத்தில் கபில் வேலவன், தக்ஷா, குணவந்தன் ,அர்ஜுன் தேவ் ,சாம்பசிவம் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள் ,இந்த படத்தின் ஒளிப்பதிவு அஜய் ஆபிரகாம் ஜார்ஜ், இசை அனிலேஷ். எல். மாத்யூ.

கபில் வேலவன், தக்ஷா, குணவந்தன், அர்ஜுன் தேவ் சரவணன்,சாம்பசிவம், பிரேம் என்னும் நண்பர்கள் ஒரு இரவு பொழுதில் மது குடிக்கும் பொழுது சண்டையிட்டு கொள்கிறார்கள் அந்த சட்டையின் போது ஏற்படும் மோதலினால் மது பாட்டிலால் குத்தப்பட்டு பிரேம் இறந்து போகிறார் பிரேமின் கொலைக்கு யார் காரணம் ? என்று நண்பர்களுக்குள் வாக்குவாதங்கள் ஏற்படுகின்றன. கபில் வேலவன், பிரேமின் உடலை காரின் டிக்கியில் மறைத்து வைக்கிறார் ,அதற்குப் பிறகு அங்கிருந்து கிளம்பி செல்லும் நண்பர்கள், கொலை செய்யப்பட்ட பிரமின் உடலை என்ன செய்தார்கள் ?அதற்குப் பிறகு அந்த இரவில் என்னென்ன சம்பவங்கள் நடைபெற்றது? இறுதியாக நடந்தது என்ன ?என்பதை படத்தின் மீதி கதை.

கதையின் மைய கதாபாத்திரங்களில் நடித்துள்ள கவின் வேலவன், தக்ஷா,குணவந்தன் ,அர்ஜுன் தேவ் சரவணன் போன்றவர்கள் தங்களுடய கதாபாத்திரங்களை நன்றாக உள்வாங்கி அருமையாக நடித்துள்ளார்கள்.

இரவிலேயே நடக்கும் சம்பவங்களை கொண்ட சவாலான கதைக்களத்துக்கு சிறப்பான பங்களிப்பை தன்னுடைய ஒளிப்பதிவு மூலம் வழங்கி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் அஜய் ஆபிரகாம் ஜார்ஜ்.அனிலேஷ் மேத்யூவின் பின்ணணி இசை, காட்சிகளின் பின்புலத்தின் வழிய இணக்கமாக பயணித்துள்ள விதம் பாராட்டத்தக்கது.

புதுமையான கதைக்களம் ,வித்தியாசமான திரைக்கதை ,இயல்பான உணர்வுகளை சித்தரிக்கும் கலைஞர்கள் என பன்முகத்தன்மையுடன் கூடிய படத்தினை அறிமுக இயக்குனர் ராம் இந்திரா சிறப்பாக உருவாக்கியுள்ளார்.

மனிதர்கள்- ரசிக்கதக்கவர்கள்

Spread the love