Thursday, April 23

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி 51 படப் படப்பிடிப்பு கோலாகலமாக மலேசியாவில் நிறைவு !!

இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில், ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிக்கும் விஜய் சேதுபதி 51 படப் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது !!

7 Cஸ் என்டர்டெய்ன்மென்ட் பட நிறுவனம் தயாரிப்பில், ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில், இயக்குநர் பி. ஆறுமுக குமார் இயக்கத்தில், ஆக்சன் காமெடி கமர்சியல் படமாக உருவாக்கப்பட்டு வரும் விஜய் சேதுபதி 51 படத்தின் படப்பிடிப்பு, மலேசியாவில் முழுமையாக நிறைவடைந்துள்ளது.

இப்படத்தின் முழுக்கதையும் மலேசியாவில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது. ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ எனும் படத்தை இயக்கிய இயக்குநர் பி. ஆறுமுக குமார் காதல், நகைச்சுவை, சென்டிமென்ட், ஆக்சன் என அனைத்து அம்சங்களுடன் முழு நீள கமர்சியல் படமாக இப்படத்தை இயக்கி வருகிறார்.

Spread the love