எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் மதியழகன் மற்றும மாலிக் ஸ்ட்ரீம்ஸ் நிறுவனம் இணைந்து படத்தை தயாரித்துள்ள‘மஹா’ படத்தில் நடிகர் சிலம்பரசன் , நடிகை ஹன்சிகா ,குழந்தை மானஸ்வி, ஸ்ரீகாந்த், தம்பி ராமையா, கருணாகரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.அறிமுக இயக்குநர் யு.ஆர்.ஜமீல் இயக்கியுள்ள இந்தப் படத்தின் இசை- ஜிப்ரான், ஒளிப்பதிவு- லக்ஷ்மன் ‘மஹா’ படம் ஹன்சிகாவின் 50-வது படம் என்பது இங்கு ஹைலைட் ஆன தகவல் ஆகும்
முக்கிய கதாபாத்திரத்தில்,விமானப் பெண்ணாக வரும் ஹன்சிகா மோத்வானி, பைலட் சிலம்பரசனை காதலிக்கிறார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. போதைக்கு அடிமையாகி இருக்கும் ஒருவன் தொடர்ந்து குழந்தைகளை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்து வருகிறான். அவனை பிடிக்க காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் ஸ்ரீகாந்த் நடித்துள்ளார் .மஹாவின் மகள் ஐஸ்வர்யா காணாமல் போகிறாள்.தன்னுடைய திறமையின் மூலமே வில்லனை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஹன்சிகா வெற்றி பெற்றரா? மேலும் கடத்தப்பட்ட குழந்தையின் நிலை என்ன ?தொடர் கொலையாளி பிடிபட்டாரா? என்பதே படத்தின் எஞ்சிய கதை.
ஹன்சிகா புதிய பரிமாணத்தில் ஒரு குழந்தைக்கு தாயாக, குழந்தையை காணாமல் தவித்து ஏங்கும் அன்பான தாய் கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் சிம்புவிற்க்கு படத்தில் சில காட்சிகளே இருந்தாலும் நிறைவான நடிப்பை தந்துள்ளார் இன்னமும் இவருக்கு காட்சிகள் சேர்க்கப்பட்டிருக்கலாம்.சிலம்பரசன், ஹன்சிகா காதல் காட்சிகள் ரசிகர்களை கண்டிப்பாக கவரும் வகையில் உள்ளது .ஸ்ரீகாந்த்,தம்பிராமையா,மானஸ்வி,சுஜித்சங்கர் என் எல்லோரும் தங்கள் பங்களிப்பை சிறப்புடன் வெளிபடுத்தியுள்ளார்கள்.
சஸ்பென்ஸ் திரில்லர் கதைகளுக்கு அடிப்படையான ஒளிப்பதிவும் இசையும் இந்த படத்தில் இயக்குனருக்கு மிகவும் உறுதுணையாய் அமைந்துள்ளன அத்தகைய இசையை ஜிப்ரானும் ஒளிப்பதிவை லஷ்மணும் திறம்பட வழங்கியுள்ளார்கள் .
தாயின் சென்டிமென்ட் ,சஸ்பென்ஸ் திரில்லர் என இரண்டும் கலந்த ‘மஹா’ திரைப்படம் நல்ல பொழுதுபோக்கு படங்களின் வரிசையில் நின்று ரசிகர்களை நிச்சயம் கவரும்