Wednesday, June 10

மாயக்கூத்து -திரை விமர்சனம்

சில நேரங்களில் எதிர்பாராத தருணத்தில் சில படங்கள் வெளிவந்து நம்மை ஆச்சரியப்படுத்தும். அப்படிப்பட்ட படங்கள், மாற்றம் ஒன்றே மாறாதது என்பதை வெளிப்படுத்தும் வண்ணமாக வெளிவந்து திரையினை புதுப்பித்துக் கொள்ளும். அந்த வகையில் இந்த வாரம் வெளியாகி இருக்கும் மாயக்கூத்து திரைப்படமும் அப்படித்தான் ,எவ்விதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் ,சத்தம் இல்லாமல் வந்து, நிசப்தத்தை கலைத்து புதுவிதமான திரைக்கதையை தன்னகத்தே கொண்டு மிளிர்கின்ற படமாக  திகழ்கின்றது.

எழுத்தாளராக இருக்கிற நாகராஜன் கண்ணன் ஒரு மூன்று விதமான தொடர்கதையே ஒரு பத்திரிக்கையில் எழுதுகிறார்.அதில் ஒன்று , 49 கொலைகளை செய்த ரவுடி தினா, ஐம்பதாவது கொலையை பண்ண எந்த விஷயம் தடையாய் இருக்கு ,இரண்டாவது, கார்பென்டர் உடைய மனைவியான ஐஸ்வர்யா ,ரகுபதி வீட்டில் வேலை செஞ்சு குடும்பம் நடத்துறாங்க, தனக்கு இருக்கிற ஒரே பையனை மெட்ரிகுலேஷன் ஸ்கூல்ல படிக்க வைக்கிறாங்க ,ஆனா பீஸ் கட்டாததுனால, பையன ஸ்கூலுக்கு அனுப்பாம இருக்காங்க, இதற்காக, தான் வேலை செய்ற வீட்டிலிருந்து பணம் கடனா கேட்க, பணமும் கிடைக்க, வேறு வீட்டுக்கு போய் வேலை செய்ற ஐஸ்வர்யா வேலை மீது திருட்டுப் பழி விழுது ,இவர்களுடைய கதை ஒரு பக்கம்இருக்க , இன்னொரு பக்கம் ஒரு சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த மிருதுளா , 12ஆம் வகுப்பு , முடிச்சுட்டு டாக்டராக ஆகவேண்டும் என்ற கனவோட இருக்கிறாங்க,ஆனா அதற்கான வாய்ப்புக்கு, நீட் போன்ற சிக்கல்கள் தடையா அமைய, அவருடைய கனவு பலிச்சதா என்பதுதான் மூன்றாவது கதை, இந்த மூன்று கதைகளையும் ,அதற்கான கதாபாத்திரங்களையும் உருவாக்கி ,தொடர்கதையா அவர் எழுதுறாரு. தான் படைத்த கதைக்கும் கதாபாத்திரங்களுக்கும் தானே கடவுள், தான் எடுத்த முடிவு தான் கதையோடு முடிவாகவும் அமையனும்னு நினைக்கிறாரு ,நாகராஜன். அவர் எழுதிய சில பகுதிகள் டெல்லி கணேஷின் பதிப்பகம் மூலமாபத்திரிக்கை வாயிலாக வெளியாகுது ,வாசகர்கள் இடையே தொடர்கதைக்கான சுவாரசியமும், எதிர்பார்ப்பும் ஏற்படுது, இந்த சூழ்நிலையில் நாகராஜன் எழுதிய இந்த கனவுலக கற்பனை கதாபாத்திரங்கள் அனைத்தும் நிஜ வாழ்க்கையில சந்திக்கிறது ,கடைசில அவர் உருவாக்கிய கற்பனை உலகத்துக்குள்ளாக அவர் வாழ போக, கதையின் முடிவையும் மாற்ற சொல்லி கதாபாத்திரங்கள் மிரட்டுறாங்க, அதற்கான நியாயத்தையும் கதாபாத்திரங்கள் சொல்றாங்க, கடைசில மூன்று விதமான தொடர்கதைக்கும் முற்றுப்புள்ளிய, முடிவை தான் நெனச்சபடி அவர் எழுதினாரா ? இல்லை கதாபாத்திரத்தின் மிரட்டலுக்கு ஏற்ப மாற்றி எழுதினாரா? என்பதுதான் மாயக்கூத்து படத்தின் முடிவு.

படத்துடைய வாசன் கதாபாத்திரத்தில் நடிச்சிருக்கிற நாகராஜன் கண்ணன் எழுத்தாளர் என்கிற அடையாளத்திற்கு ஏத்த மாதிரி அவருடைய தோற்றத்தில் கனகச்சிதமாக பொருந்தி இருக்காரு, நிஜ உலகிற்கும், கற்பனை உலகிற்கும் மத்தியில் போராடும் கதாபாத்திரத்தை தன் நடிப்பின் மூலமாக மட்டுமல்லாமல் , தன் வசனங்கள் மூலமாகவும் நியாயம் கற்பித்து இருக்கிறார். வாசன் கதாபாத்திரமாக நடித்ததோடு மட்டுமில்லாமல் படத்திற்கு வசனமும் எழுதி இருக்கின்ற நாகராஜ கண்ணனுடைய வசனங்கள் வெகு கூர்மையான அரசியலையும் பேசுவதோடு ,யதார்த்தமான மனிதர்களின் எண்ணத்தை நியாயப்படுத்தியும் உள்ளது ,படத்திற்கு மிகப்பெரிய பலமா அமைஞ்சிருக்கு.

அனுபவம் வாய்ந்த நடிகரான டெல்லி கணேஷின் நடிப்பு இந்த படத்திலும் மீண்டும் யதார்த்தமாக அமைந்து இருந்ததோடு ,அவர் தற்போது நம்மிடம் இல்லையே என்கின்ற ஆதங்கத்தை ஏற்படுத்தியிருக்கு,. ரவுடியாக வரும் சாய்தினா 50ஆவது கொலையை பண்ண முடியாமல் தடுப்பதற்கான விஷயத்தை சொல்லும்போது மிக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார், ஐஸ்வர்யா ரகுபதியின் கதாபாத்திரம் முக்கியமானதாக மட்டும் இல்லாமல், அவருடைய நடிப்பும் படத்திற்கு பக்க பலமாகவும் அமைஞ்சிருக்கு,. மிருதுளா படத்துல சில காட்சிகள் மட்டுமே வந்திருந்தாலும் தன் நடிப்பின் மூலமாக மென்மையாகவும் வன்மமாகவும், சந்தோஷமாகவும் நடிச்சிருக்காங்க.

படத்துக்கு கதையையும், திரைக்கதையையும் எழுதியுள்ள இயக்குனர் A. R. ராகவேந்திரா , சிறப்பாக படத்தினை இயக்கியுள்ளார் . M. ஸ்ரீனிவாசனும் இயக்குனருடன் இணைந்து எழுதிருக்கிறார். சுந்தர் ராம் கிருஷ்ணனின் ஒளிப்பதிவும் ,,அஞ்சனா ராஜகோபாலனின் இசையும், கதைக்கும் காட்சிகளுக்கும் இசைந்தவண்ணம் நன்கு அமைந்துள்ளது .

மாயக்கூத்து – திரைஜாலம்

Spread the love