லியோ சிவகுமாரும் ,ஆரியனும் பறை இசை கலைஞர்களாக உள்ளனர், அவர்கள் ஆதி பறை என்னும் இசைக்குழு ஒன்றையும் நடத்தி, அதன் மூலம் பாரம்பரியமான பறை இசையினை பரவச் செய்யும் பணியினை செய்து வருகிறார்கள்,ஆனால் அவர்களுடைய பறை இசைக்கும் ,அதனை இசைக்கும் பறை இசை கலைஞர்களுக்கும் சமூகத்தில் சரியான மதிப்பு கிடைப்பதில்லை, பள்ளி ஆசிரியை காயத்ரி ரெமாவை, லியோ சிவக்குமார் காதலிக்கிறார், ஒரு சமயம் லியோவிற்கு வேறு ஒரு ஊரில் நிகழ்ச்சி இருக்க ,பள்ளி நிகழ்ச்சி ஒன்றுக்கு அவரது நண்பன் ஆர்யன் செல்கிறார்,அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் பறை வாசிக்கும் பெண்களிடம் ஆதிக்க சக்தியை சேர்ந்த சிலர் தவறாக நடந்து கொள்ள முயற்சிக்கிறார்கள், அவர்களை ஆரியன் கண்டிக்கிறார், இதனால் அவர் கொல்லப்படுகிறார், இதன்பின் என்ன நடந்தது ? என்பதுதான் மாண்புமிகு பறை படத்தின் மீதி கதை.

கதையின் மைய கதாபாத்திரத்தில் லியோ சிவகுமார் ,வெற்றி என்னும் கதாபாத்திரத்தில் பறை இசை கலைஞராக நடித்துள்ளார் ,கிராமிய இசைக்கலைஞராக தான் ஏற்றுள்ள கதாபாத்திரத்திற்கு பொருந்தும் வண்ணம் தன் யதார்த்தமான நடிப்பினை அவர் நன்கு வெளிப்படுத்தியுள்ளார்.
காயத்ரி ரெமா ஏற்றுள்ள கதாபாத்திரமும் அதனை அவர் சிறப்பாக நடித்து வெளிப்படுத்தி இருந்த விதமும் நன்றாக இருந்தது ,மேலும் ஆர்யன், காதல் சுகுமார் ,கஜராஜ் நடித்துள்ளார்கள் .இசையமைப்பாளர் தேனிசை தென்றல் .தேவாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்பதற்கும், பார்ப்பதற்கும் நன்றாக உள்ளன ,அவரது பின்னணி இசையும் காட்சிகளுக்கு பலமாய் நின்றுள்ளது ..கிராமத்து பின்புலத்தை அங்கு வாழும் மக்களின் வாழ்வியலை கொளஞ்சி குமாரின் கேமரா நன்றாக பதிவு செய்துள்ளது .
இந்த படத்தினை எழுதி இயக்கியிருப்பவர் எஸ் விஜய் சுகுமார், படத்தில் இடம்பெற்றிருக்கக்கூடிய பறை இசை வரலாற்றினை சிறப்பாக உருவாக்கி இருக்கிறார் ,பாரம்பரியமாக நம் மண்ணின், நம் மக்களின் கலாச்சாரத்தோடு ஒன்றி பயணித்து வந்திருக்கக்கூடிய பறை இசையின் அருமை பெருமைகளை இந்த படம் சொல்வதோடு ,அந்தக் கலையினை ஏற்றி இருப்பவர்கள் எப்படி எல்லாம் இந்த சமூகத்தில் புறந்தள்ள படுகிறார்கள் என்பதனையும் பதிவு செய்யும் வகையில் இந்த படத்தினை இயக்குனர் உருவாக்கி இருக்கிறார்.
மொத்தத்தில் மாண்புமிகு பறை சரியான திட்டமிடப்படல் இருந்திருந்தால் இன்னமும் ஓங்கி ஒலித்து இருக்கும்.
