ஓர் படம் வெளியாவதற்க்கு முன்பாக அந்த படத்தில் ஒரு பிரபல நடிகர் நடித்திருந்தாலோ அல்லது பிரபலங்களின் வாரிசு நடித்திருந்தாலோ, ரசிகர்கள் அந்த படம் வெளியாவதை எதிர்பார்ப்புடன், எதிர்நோக்கி காத்திருப்பார்கள் ,இந்த படத்தை பொறுத்தவரை படத்தின் தயரிப்பாளரான தோனி தயாரிக்கும் படம், அதுவும் முதல் படம் தமிழ் படம் என்பதால் தமிழ் ரசிகர்கள் ‘எல்ஜிஎம்’ படம் குறித்து எக்கசக்க எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்தார்கள்.

LGM என்ற Let’s Get Married என்ற அந்த திரைப்படத்தின் கதையானது ….இளம் வயதிலேயே தந்தையை இழந்த இளைஞர் கவுதம் (ஹரீஷ் கல்யாண்) தனது தாய் லீலாவுடன் (நதியா) வளர்ந்து வருகிறார் . கெளதம், மீரா (இவானா) இருவரும் இரண்டு வருட டேட்டிங்கிற்கு பிறகு திருமணம் செய்துக் கொள்ள எடுக்கும் முடிவினை, அம்மா லீலாவும் (நதியாவோ ) ஏற்றுக்கொண்டு சம்மதம் கூறுகிறார். ஆனால் திருமணம் குறித்து பேசப்போன இடத்தில் திருமணத்துக்கு பின் இவானா, மாமியாருடன் ஒன்றாக ஒரே வீட்டில் வாழ இயலாது என்று கூறி திடீரென திருமணத்தை நிறுத்துகிறார்,இதனால் அந்த கல்யாண பேச்சு பாதிலேயே நின்று விடுகிறது. இந்தநிலையை சரி செய்ய ஹரிஷ் கல்யாண்குடும்பதினரும், இவானா குடும்பதினரும் ஒன்றாக சேர்ந்து ஒரு சுற்றுலா செல்கிறார்கள். அந்த சுற்றுலா பயணத்தால்,தன் வருங்கால மாமியாரை இவனாவால் புரிந்து கொள்ள முடிந்ததா ? அதன் பின் கெளதம்-மீராவுக்கு திருமணம் நடைபெற்றதா ?என்பதே மீதி கதை.

இரண்டு பெண்களுக்கு இடையே பயணம் செய்யும் ‘கெளதம்’ என்னும் கதாபாத்திரத்தில் ஹரிஷ் கல்யாண் இன்றைய இளம் வயதினரை பிரதிபலிக்கும் வண்ணம் நன்கு நடித்துள்ளார், மீரா என்ற கதாபாத்திரத்தில் இவானா நடித்துள்ளார் இவரும், அம்மாவாக நதியாவும், கதாபாத்திரங்களின் தன்மைக்கு ஏற்ப நிறைவாக நடித்துள்ளார்கள்,

மேலும் மிர்ச்சி விஜய், யோகி பாபுவின் காமெடி காட்சிகள் படத்தின் முதல் பாதியில் மிகவும் ரசிக்கும் படி உள்ளன. விஸ்வஜித் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்தினை இயக்கிய ரமேஷ் தமிழ்மணியே இந்த படத்துக்கு இசையும் அமைத்திருக்கிறார்.

குடும்ப பொழுதுபோக்கு நகைச்சுவை படமான இந்த திரைப்படத்தை அனைத்து குடும்ப உறுப்பினர்களும் சேர்ந்து பார்க்கும் வகையில் ரமேஷ் தமிழ்மணி உருவாக்கியுள்ளார்.படத்தின் கதை இன்றைய இளைய சமூகத்தின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது,
பெரிய எதிர்பார்ப்பின்றி படம் பார்க்க போனால் நல்ல timepass படமாக எல்.ஜி.எம் இருக்கும்.
