Sunday, April 19

L2: எம்புரான்- திரைவிமர்சனம்

2019-ல் வெளிவந்து பிளாக்பஸ்டர் வெற்றிபெற்ற லூசிஃபர் படத்தின் தொடர்ச்சியாக, அதிரடி ஆக்சன் கதைக்களத்தில், பிரித்திவிராஜ் சுகுமாரன் இயக்கத்தில்,பிரமாண்டமாக உருவாகியுள்ள பான் இந்தியப் திரைப்படம் “எம்புரான்”

கேரளாவுல CM – ஆ இருக்குற சச்சின் கடிகர் இறந்துபோக ,அவருடைய மகனான டோவினோ தாமஸ்ஸை CM ஆ அமர வைத்துவிட்டு ,மோகன்லால் கேரளாவை விட்டு போறாரு, கடைசியில சில வருடங்கள் போக தன் அப்பாவுடைய அரசியல் பாதையில் இருந்து விலகி போய், மதவெறியோட இருக்குற அபிமன்யு சிங்யுடைய கட்சியுடன் சேர்ந்து களமிறங்க டோவினோ தாமஸ் முடிவு பண்றாரு, இதனால மதமும் இனவெறியும் கேரள அரசியலில் கலந்துவிடுமோன்னு அச்சம் ஏற்பட, அவருடைய சகோதரியான மஞ்சுவாரியாருக்கும், கட்சிகுள்ளும் கருத்து வேறுபாடு ஏற்படுது. இதை பத்தி எவ்விதமான கவலையும் படாம ரகசியமாக அபிமன்யுவை சந்திக்க டோவினோ தாமஸ் போறாரு, இந்த விஷயத்த ரிப்போட்டர் ஆன கோவர்தன் ( இந்திரஜித் சுகுமாரன்) ஸ்டீபன் இருக்குற இடத்த கண்டுபிடிச்சி ,நாட்டோட அரசியல் சுழ்நிலைய சொல்லி திரும்ப வர சொல்றாரு, தன்னோட தம்பிய ஏதிர்த்து அப்பாவின் பெயருக்கு களங்கம் வராமல் அரசியல் செய்யுற மஞ்சுவாரியார் புதுவிதமான யுக்தியை கையில் எடுக்க, இதனால அரசியலில் ஏற்படும் மாற்றம் என்ன? நெடும்பள்ளியில இருக்குற அணையையும், அந்த மாநில மக்களையும், யார் காப்பத்துனாங்க? ஸ்டீபன் திரும்பி வந்தாரா?, CM ஆக டோவினோ தாமஸால தொடர முடிஞ்சதா?, பால்ராஜ்யுடைய ஆசை நிறைவேறியதா? என்பது தான் எம்புரான் படத்தோட மீதிக்கதை.

கதையின் நாயகனாய் நடித்துள்ள மோகன்லால், ஸ்டீபன் நெடும்பள்ளி மற்றும் அப்ராம் குரேஷி என்னும் இரு வேடங்களிலும் ,சிறப்பான உடல்மொழியாலும் அதிரடி ஆக்ஷனாலும் தன்னுடைய பண்பட்ட அனுப நடிப்பை வெளிப்படுத்தி, ரசிகர்கள் மனதில் வலுவான தொரு இடத்தை பிடிக்கிறாரு ,டொவினோ தாமஸின் மிரட்டலான நடிப்பு மனசார பாராட்டக்கூடிய வகையில இருக்கு ,மஞ்சுவாரியரோட யதார்த்தமான நடிப்பு அவர் ஏத்துக்கிட்டு இருக்கற கதாபாத்திரத்துக்கு தனி ஈடுபாட்டை கொடுக்குது. மேலும் குறிப்பாக .ப்ரித்விராஜ், அபிமன்யு சிங் இந்திரஜித் சுகுமாரன், ஃபாசில், சுராஜ் வெஞ்ஞாரமூடு, கிஷோர் என பல நடிகர்கள் படம் முழுக்க தங்களோட சிறப்பான பங்களிப்பை அவங்களோட நடிப்பு மூலமா கொடுத்துருக்காங்க

தீபக் தேவின் இசை பின்னணி இசையும், ஒளிப்பதிவாளர் சுஜித் வாசுதேவின் கேமரா கோணங்கள் மற்றும் ஒளிஅமைப்பும் படத்தின் பின்புல காட்சிகளுக்கு பக்கத்துணையாக அமைந்துள்ளது,புதுமையாகப் பல விசயங்களை திரைக்களத்தில் இணைத்து,அதற்கு வலு சேர்க்க, தேர்ந்த தொழில் நுட்ப கலைஞர்கள், அனுபவமிக்க நடிகர்கள் என்ற கூட்டணியுடன் இயக்குநர் பிரித்திவிராஜ் சுகுமாரன் இந்த படத்தை பிரம்மாண்ட ஆக்சன் படமாக இயக்கியிருக்காரு.

ஒவ்வொரு ஃபிரம்லேயும், பிரம்மாண்டமும், தொழில்நுட்ப மெனக்கிடலும், பலரின் உழைப்பும் வெளிபட்டு இருக்கு. முதல் பாதியில இன்னும் கொஞ்சம் திரைக்கதையில சுவாரசியமான விஷயங்களை சேர்த்து இருந்தா தொய்வை சரி செய்து இருக்கலாம். ஆனா செகண்ட் ஹாஃப் முற்றிலும் விறு விருப்பாக இருக்கு, ஸ்டண்ட் மாஸ்டர் ஸ்டன்ட் சில்வாவுக்கு ஸ்பெஷல் விஷஸ் சொல்லிக்கலாம்.

மலையாள திரைப்படங்களில் பெரும்பாலும் காணப்படாத சில விஷயங்கள் இந்த படத்தில் இருந்தாலும் பான் இந்தியபடம் என்பதால் அவை உள்ளதோ என்று தோன்றுகிறது ,ஆனால் சம கால அரசியலை நேர்த்தியான தொழில் நுட்பத்துடன் திரைக்கதையாக சொல்லி இருப்பதால் எம்புரான்-மிளிர்கிறான்.

Spread the love